தமிழகத்தை சேர்ந்த முதுகலை பட்ட மாணவி ஒருவருக்கு, லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் பைனான்ஸில் MBA படிப்புக்கான முழு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுருதி விஜயசந்திரன் என்ற தமிழக மாணவிக்கு இந்த வாய்ப்பு, அவர் Best Young Speaker from Asia போட்டியில் முதல் பரிசை தட்டிக் கொண்டதையடுத்து கிடைத்துள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆசிய நாடுகள் பலவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாணவ, மாணவிகள் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். போட்டி, கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ராபின்சன் காலேஜில் நடைபெற்றது.
போட்டியில், ஒரு பிசினெஸ் தீமை அடிப்படையாக வைத்து, இரு பிரசன்டேஷன்கள் செய்ய வேண்டும்.
அதையடுத்து, நிபுணர்கள் குழு ஒன்றில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கலந்துகொண்ட 9 போட்டியாளர்களிடையே முதலிடத்தை பெற்றிருக்கிறார் தமிழக மாணவி.
சுருதி விஜயசந்திரன், குன்னூரைச் சேர்ந்தவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக