புதன், 1 ஆகஸ்ட், 2012

Infosys மாடியிலிருந்து விழுந்து பெண் பலி-தள்ளி விட்டது யார்?

 Woman Jumps Death From Infosys Building  ஹைதராபாத்தில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண் அலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவலும், தவறி விழுந்ததாக இன்னொரு தகவலும் கூறுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள இன்போசிஸ் அலுவலகம் பல மாடிகளைக் கொண்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு அந்த அலுவலகத்தின் மாடியிலிருந்து கீழே வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் அந்தப் பெண் ஊழியர் விழுந்தார். அவரது பெயர் நீலிமா யெருவா. வயது 30. விழுந்த வேகத்தி்ல தலை சிதறி அவர் பரிதாபமாக பலியானார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லு தவறி விழுந்தாரா அல்லது யாராவது பிடித்துத் தள்ளி விட்டார்களா என்பது தெரியவில்லை.
சமீபத்தில்தான் அவர் அமெரிக்காவில் ஐந்து மாத கால பணியை முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பியிருந்தார். இவருக்குத் திருமணமாகி விட்டது. இவரது குடும்பத்தினர் குகட்பள்ளியில் வசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக