வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

India வால்ட் டிஸ்னியின் ரூ1,000 கோடி முதலீடு

டெல்லி: வால்ட் டிஸ்னியின் ரூ1,000 கோடி முதலீடு உள்ளிட்ட 10 அன்னிய நேரடி முதலீட்டு திட்ட பரிந்துரைகளுக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
அன்னிய நேரடி முதலீட்டுக்கான 26 திட்ட பரிந்துரைகளை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து மொத்தம் ரூ1259.92 கோடி அளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ரூ 1,000 கோடி முதலீட்டு திட்டமும் அடக்கம். மற்ற 9 திட்டங்களும் ரூ 260 கோடியிலானவை.
முடிவை ஒத்தி வைத்திருக்கும் 16 திட்டங்களில் முக்கியமானது தமிழ்நாட்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனமானது யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு துறையில் முதலீடு செய்வதற்கான திட்டமும் அடங்கும்.
மற்றவை பெரும்பாலும் மருந்து துறை நிறுவனங்களாகும். அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக 4 திட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சகட்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக