புதன், 22 ஆகஸ்ட், 2012

டுவிட்டர் வலைதளம் மீது நடவடிக்கை- மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: வடகிழக்கு மாநிலத்தவருகு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான ஆட்சேபனைக்குரிய பக்கங்களை நீக்காத டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வடகிழக்கு மாநிலத்தவர் மீது வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் இணையதளங்களிலும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் விஷமிகள் உலவவிட்டனர். ஃபேஸ்புக், யூ டியூப், டிவிட்டர் தளங்களில் இத்தகைய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசின் கடுமையான ஆட்சேபனைக்குப் பிறகு ஃபேஸ்புக் ,யூ டியூப் ஆகிய தளங்கள் ஆட்சேபனைக்குரிய பக்கங்களை நீக்கிவிட்டன. மேலும் 254 இணையளதங்களை மத்திய அரசு தடை செய்தும்விட்டது. ஆனால் டுவிட்டர் சமூக வலைதளம் மட்டும் ஆட்சேபனைக்குரிய பக்கங்களை நீக்காமல் இருந்து வருகிறது.
வன்முறை மற்றும் பீதியை ஏற்படுத்தும் பக்கங்களை டுவிட்டர் இணையதளம் நீக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக