சனி, 25 ஆகஸ்ட், 2012

ஆசிரியர் உதைத்ததில் சிறுவனின் சிறுநீரகம் பழுதானது

ஜம்முவில் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்புப் படிக்கும் மாணவனின் வயிற்றில், ஆசிரியர் எட்டி உதைத்ததால் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவனது ஒரு சிறுநீரகத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவனை ஆறு மாத கால ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக