ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ராதாரவி:ஜெயலலிதா பிரதமராக வேண்டும்

’தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க. வை அழித்து விடுவோம் என கூறிய பலர் இன்று காணாமல் போய் விட்டனர்.

அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி. முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

வசதி படைத்தவர்களே வாங்க யோசிக்க கூடிய லேப்-டாப் கம்ப்யூட்டரை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் வழங்கி அவர்களையும் சமநிலைக்கு உயர்த்தி உள்ளார். இது தான் நாட்டிற்கு தேவையான வளர்ச்சி.இலங்கையில் 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் டெசோ மாநாடு நடத்தி மக்களை குழப்புகிறார். விஜயகாந்துக்கு 41 சீட் கொடுத்து அவரை எதிர்கட்சி தலைவர் ஆக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவருக்கு அதை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. அவரெல்லாம் புரட்சிதலைவியை பற்றி பேசக் கூடாது.


கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார். நான் இப்போது கூட வருடத்திற்கு 5 படங்களிலாவது நடிக்கிறேன். ஆனால் ஒரு நல்ல நடிகர் வடிவேலு. அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்க வில்லை. மாறாக விஜயகாந்தை பழி வாங்குவதாக நினைத்து பேசினார். ஒரே நாள் ராத்திரியில் இருந்து அவருக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

சிலர் புரட்சிதலைவிக்கு இந்தியாவின் பிரதமராக ஆசை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல, இந்தியா தான் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளையும் இலக்கணத் தோடு பேசும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவி. அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க.தான் அமோக வெற்றி பெறும்’’என்று தெரிவித்தார்.
 அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சகாய ராஜ், கவுன்சிலர் ஸ்ரீஐயப்பன், நகர பேரவை துணை தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பேரவை செயலாளர் மாதவன் பிள்ளை வரவேற்று பேசினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பழகன், வனத் துறை அமைச்சர் பச்சைமால், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் நம்பி ராஜன், நடிகர் ராதா ரவி மற்றும் பலர் பேசினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக