வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

டில்லிக்கு வாஷிங்டன் ரெட் சிக்னல்: “வெப்சைட்டில் கை வைக்காதிங்க சார்”

Viru News
விக்டோரியா நுலண்ட்
அசாம் கலவரம் தொடர்பான வதந்திகளை பரப்புவதில் இணைய தளங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு, அது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை, ‘ராஜதந்திர பாஷையில்’ பதில் கொடுத்திருக்கிறது அமெரிக்கா. அந்த பதில், “It’s a BIG NO, buddy”
அப்படியான விவகாரங்களில் நம்ம கலைஞர் சொல்வது போல, நேரடியாக பதில் சொல்வதில்லை அமெரிக்கா. அவர்கள் ராஜதந்திர பாஷையில் கூறுவார்கள். புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
இணைய தள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட், “உள்நாட்டு பாதுகாப்போடு, இணைய தளங்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் இந்தியா உறுதி செய்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அதன் அர்த்தம், “உங்க உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் நடவடிக்கை எடுப்பதில் எமக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால், நம்ம தலையில் கை வைக்க பார்க்காதிங்க”

சமீபத்தில் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளியேறியது தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் வதந்தி பரப்பிய நபர்களின் முகவரிகளை முடக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஃபேஸ்புக்கின் சில கணக்குகள் தொடர்பாகவும், மத்திய உளவுத்துறை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டும் தமக்கு பிடித்தமான நடவடிக்கைகள் அல்ல என்று சொல்வதே, விக்டோரியா நுலண்ட்டின் பதில்.
“கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கொள்கை. அதே நேரத்தில், இந்த விஷத்தில் இந்திய அரசுக்கு முடிந்தளவு உதவத் தயார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றுக்கும், வேறு ஒரு அர்த்தம் உள்ளது.
இதன் அர்த்தம், இந்த விவகாரத்தை அவர்களும் மானிட்டர் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ தகவல் உள்ளது. (டில்லிக்கு கொடுப்பார்களா என்பது வேறு விஷயம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக