வியாழன், 30 ஆகஸ்ட், 2012

தமிழர்களை களப்பிரர்கள் என்றனர் பார்ப்பனர்கள்

களப்பிரர்கள் என்ற சொல் திராவிடர்களை கருப்பு வீரர்கள் என்று வர்ணிக்கும் ஒரு நிற வெறி சொல்லாகும். கால பீரா என்பதுபோல் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான சொல்லென்பது திராவிடர்களுக்கே தற்போது தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது. பார்பனியத்தை ஆதரித்த சேர சோழ பாண்டியர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்ட உண்மையான இனமான தமிழர்களே பாபனர்களால் களப்பிரர்கள் என்று கொச்சை படுத்தப்பட்டார்கள் 

தினமணி தன் திருந்தாத தெருவாயை மீண்டும் திறதிருக்கிறது. அதனுடைய ஆசிரியராக இருக்கின்ற பேர்வழி, பச்சை ஜாதி வெறிகொண்ட சனாதனவாதி என்பது உலகறிந்த ரகசியம். எந்த விழாவானாலும் அங்கே போய் திராவிட இயக்க எதிர்ப்பையும், கலைஞர் எதிர்பார்பையும் காட்டி தங்கள் பாரம்பரிய அரிப்பைப் பலரறியச்சொறிந்து கொள்வது பழக்கம். திருமுறை ஆருட்பணிகளைப் பற்றிப்பேச நடந்த விழா ஒன்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சொல்வதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு அதைவிட உண்மையான களப்பிரர் காலம் இருபதாம் நூற்றாண்டுதான் என்று பேசியிருக்கிறார்.
அரசு விழாக்கள், பொது விழாக்கள் எதுவானாலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடுவது என்று கலைஞர் ஆட்சிக்காலம் துவக்கி வைத்த ஓர் ஒழுக்க நெறியை, இப்போது சிலர் கடவுள் வாழ்த்துப்பாடி விழா வைத்துவக்குகிறோம் என்ற பெயரால் தமிழ்த்தாய் வாழ்த்தை மெல்ல ஒழிக்கத்து வங்கியிருக் கிறார்கள். மேற்படி விழாவிலும் அது நடந்திருக்கிறது.
‘’கடவுள் வாழ்த்துப்பாடி இந்த நிகழ்ச்சியைத் துவங்குவதன் மூலம் களப்பிரர் காலம் முடிந்துவிட்டது என்று பொருள்’’ என மேற்படி ஆசாமியும் பேசியிருக்கிறார். களப்பிரர் காலம் என்பது பொதுவாகப் பார்ப்பன சனாதன தர்மக் கொள்கைகளுக்கு எதிராய் மனிதநேயக் கொள்கைகளைக் கொண்டிருந்த பௌத்த - சமண சார்பான அரசாக இருந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்தை மயிலை சீனிவெங்கடசாமி போன்ற வரலாற்றறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த காலத்திலேதான் இன்றைக்குத் தமிழினுடைய தொன்மையை நாம்போற்றி செம்மொழி தகுதி பெறுவதற்குரிய சிலப்பதிகாரம் போன்ற பெருமைக்குரிய இலக்கியங்களெல்லாம் உருவாகியிருந்தன. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றெனப்போற்றப்படுகின்ற மணிமேகலையும் இந்தக் காலத்திற்குரியதுதான் என்கிறார்கள். மேலும், அந்தக்காலத்தில் உருவான தமிழ் இசை - நாடக மருத்துவ நுட்பங்களை விளக்குகின்ற நூல்கள் பல பின்னர் அழிக்கப்பட்டுவிட்டன என்றும், சில பகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். ஆனால், அந்த காலத்தை இருண்ட காலம் என்று சிலர் சொல்லித்திரிகிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற நவீன களப்பிரர் காலத்திலேதான் தீவிர சமய அன்பர்களான ஓமந்தூர் ராமசாமி போன்றவர்கள் ஆட்சித்தலைவர்களாக இருந்தார்கள். இறைப்பற்று உள்ள அவர்கள்தாம், கோவில் குருக்களே சாமியின் நகைகளை விலைமாதர்கள் கழுத்திலே கொண்டு போய் சூட்டி அழகு பார்த்ததையும் அடகு வைத்ததையும் பின்பு அதையும் விற்று தின்றுவிட்டு அரோகரா போட்டதையும் கண்டுபிடித்து சட்டமன்றத்திலேயே பேசினார்கள். அதைத்தடுக்க ஏற்கனவே இருந்த அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இன்னமும் செப்பம் செய்தார்கள். இல்லையென்றால் கோவில் நகைகளையும் சொத்துக்களையும் மட்டுமல்ல, கோவிலையே குருக்களும் - போலி பக்தர்களும் சேர்ந்து குடோனுக்காக வாடகைக்கு விட்டிருப்பார்கள். இராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வித்திட்டத்தை ஒழித்து சூத்திரனுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட குருகுலக் கல்வி இருந்த நாட்டில் எல்லோருக்கும் இலவசக் கல்வி என்பது அரசின் திட்டமானது, தினமணியில் கட்டுரை எழுதின ஆட்கள் சொல்கிற இதே களப்பிரர் ஆட்சியிலேட்தான் இன்றைக்கு யோக்கியர்களைப் போல் பக்தியில்லை என்றால் தமிழ் இல்லை, தமிழ் இல்லையென்றால் பக்தி இல்லை, இதைக்கெடுத்தது திமுககாரர்கள்தான் என்று மறைமுகமாகப் பேசும் இதே ஜென்மங்கள்தாம் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கே போய் தடையாணை பெற்றிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் மறந்து போயிருக்கும் என்று நினைக்கிறார்கள். அந்த மேடையில் அவர் பேசுகிறபோது நான் மறைகளையும் சைவ சித்தாந்தத்தையும் ஒன்றென்று பொருள் படும்படிப் பேசியிருக்கிறார். நெற்றி நிறையத் திருநீற்றோடு மேடையில் வீற்றிருந்த சைவ மெய்யன்பர்களும் அது குறித்து மறுப்பேதும் சொல்லாமல் தங்கள் திருவாயில் திருநீற்றைக்கொட்டி மூடிக்கொண்டு திருச்சிற்றம்பலமே என்று உட்கார்ந்திருக்கிறார்கள். சைவசமய நெறியும் - நான்கு வேத நெறியும் ஒன்றென நம்புகிறவன் முட்டாள். பேசுகிறவன் அயோக்கியன். நவீன களப்பிரர்கள் என்று அவரால் மறைமுகமாக அழைக்கப்படும் திராவிட இயக்கத்தார், சமயம் இல்லையென்றும் நெறிகள் இல்லையென்றும் இறைவனே இல்லையென்றும் பொய்ப்பிரச்சாரத்தைச் செய்தவர்கள் என்றும் பேசியிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் எது உண்மை சமயம், எது உண்மை நெறி, எது உண்மைக்கடவுள் என்பதைப்பற்றி சைவ, வைணவ,வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் நடக்கின்ற விவாதத்தை, அடிதடியை சில சமயங்களில் போரைப்பற்றிய வரலாறு தெரியாத தற்குறிகள்தாம் திராவிட இயக்கத்தாரைக் குற்றம் சொல்வார்கள். தமிழகத்தில் இருந்த வைணவக் கோவில்களையெல்லாம் சைவக்கோயில்களாக மாற்றுவதற்கு சமர் தொடுத்தவர்கள் யார்? கோவிலிலிருந்த திருமால் சிலைகளையெல்லாம் கிணறுகளிலேயும் ஏரிகளிலே யும் தூக்கி வீசியவர்கள் யார்? வைணவ சமயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மாபெரும் புரட்சிக் காரன் என்று போற்றப்படுகின்றவரும் வைணவர்களால் கடவுளாகவே கொண்டாடப்படுகின்றவருமான இராமனுஜரை ஊருக்குள்ளே நுழைய விடாமல் கடிதோய்ச்சி விரட்டியவர்கள் யார்? சைவ மெய்யன்பர்கள் தாமே! திராவிட இயக்கத்துக்காரனா? கோவிலாவதேதடா குளங்களாவதேதடா என்று பாடினவனும் நட்ட கல்லைத்தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தும் மூடர்களே என்று சிலை வணக்கத்தைச் சாடியவனும் நாத்திகன் அல்ல. பக்தன்,சித்தன் காலங்களல் அழியாமல் காற்றோடு உலவுகிறார்கள் என்று போற்றப்படுகின்ற சித்தன்.
சாமி சிலைகளுக்கு பூசை செய்கிற குருக்களை பிறப்பால் பிராமணனானாலும் செய்யும் தொழிலாலும் நம்பிக்கையாலும் அவன் இழிஜாதி என்று ஒதுக்கி வைத்திருக்கிறவர்கள், தினமணி வைத்தியின் சொந்தக்காரர்களா? திராவிட இயக்கத்தின் தலைவர்களா? பக்தி நெறி என்பது அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம் என்பதுதான் தலைவர் கலைஞர் போன்றவர்களின் கருத்து. ஆனால் பிற சமயத்தைச் சேர்ந்தவர்களை வெறுக்கவும் எதிர்க்கவும் ஒழிக்கவுமான நிலைகள் பக்தர்களால் பக்தர்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொள்வதேயன்றி நாத்திகர்கள் ஏற்படுத்தியதல்ல. ஒரே வைணவ சமயத்தின் வடகலைப் பிரிவைச்சேர்ந்தவர்களும் தென்கலைப் பிரிவைச்சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டு இரத்தக் காயங்களுக்கு ஆளாகி நூறாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து இலண்டன் நீதிமன்றம் வரைக்கும் சென்றதற்குக்காரணம் திமுக ஆட்சியா? திருக்குறள் உலகப்பொதுமறை என்பது கிறிஸ்துவர்களாலும் கூடப் போற்றப்படுகின்ற ஓர் அரிய நூல். ஆனாலும் அது சமண, சமயக்கருத்துக்களை உள்ளீடாகக்கொண்டிருக்கிறது என்ற ஒரு தவறான கருத்து தமிழ்க்கடல் என்று பழங்காலத்தில் பாராட்டப்பட்ட சைவை சமய அன்பரான திருச்சிராபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்தது. அதனால் அவர் திருக்குறளைத் தன் மாணவர்களுக்குப் பாடமாக சொல்லித்தரமாட்டாராம். இவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களினுடைய ஆசிரியராவார். திருக்குறளைப்போன்ற ஓர் அற்புதமான நூலை மகா வித்துவான் ஒதுக்கியதற்கு காரணம் திராவிட இயக்கமல்ல, அவரது சைவ சமயப் பற்றே! மிகப் புகழ்பெற்ற தமிழிசைக்கலைஞர் மதுரை சோமந்தரம், அன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்து அமைச்சர் ஒருவரால் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். நெற்றி நிறைய திருநீற்றோடு கடும் சைவ அன்பரான சோமு, திருவரங்கம் பெரிய கோவிலுக்குள் வருவதையும் சைவக்கடளைப் போற்றும் பாடல்களை பாடக்கூடாதென்றும் வைணவ அடியார்கள் எதிர்த்தார்கள். அமைச்சரின் வேண்டுகோளின்படி வைணவர்களினுடைய சம்பிராதயப்படியான நெற்றியில் கோபி சந்தனம் அணிந்து தொடக்கம் முதல் இறுதிவரை திருமாலைப்பற்றி மட்டுமே பாடிவிட்டு சோமு வெளியே வரவேண்டியிருந்தது. இது கதையல்ல, நடந்த சம்பவம். நேரில் கண்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் இதற்கு மேல் சைவ, வைணவச்சண்டையை, யார் கடவுள் உயர்ந்தவர் என்ற சண்டையை இலக்கியத்தின் மூலமாகத் தெரிந்துகொள்வதற்கு விரும்பினால் கவிகாளமேகத்துடைய தனிப்பாடல்களை மாத்திரம் படித்தால் போதும்! தமிழை ஆட்சி மொழியாக்கி - தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்த வள்ளுவனுக்குக் கோட்டம் அமைத்து- சிலயெடுத்து சிறப்பு செய்து தமிழைச்செம்மொழியாக உயர்த்திய அண்ணாவின், கலைஞரின் காலத்தை களப்பிரர் காலம் போல இருண்ட காலம் என்று சொல்கிறவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உரியவர்கள்.< நன்றி : முரசொலி<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக