சனி, 25 ஆகஸ்ட், 2012

Kerala திலகன் கவலைக்கிடம் மோகன்லால் மம்மூட்டியின் கழுத்தறுப்பு

மோகன்லால் மம்மூட்டி போன்ற மலையாள கூத்தாடிகள் திலகனை ஒருவழி பண்ணிவிட்டார்கள் 

மலையாள நடிகர் திலகன், தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 திலகனுக்கு சினிமாவில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டது. இதனால் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் திலகனுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டுள்ளது. அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித் து வருகிறார்கள். திலகனுக்கு ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இப்போது மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கதது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக