செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஈ'யை விரட்டி விட்ட ஜுலாயி!

 தென்னகம் முழுவதும் வசூல் வேட்டையில் முன்னணியில் இருந்து் வந்த ஈகா படம் அமெரிக்காவில் புதிய சவாலை சந்தித்துள்ளது. அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள ஜுலாயி படம் ஈகாவின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறதாம்.
அமெரிக்காவில் அல்லு அர்ஜூன் படத்திற்கு முதல் முறையாக பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளதாம். ராஜமெளலியின் ஈகா அதாவது தமிழில் நான் ஈ, படத்தின் முதல் வார இறுதி வசூல் சாதனையை ஜுலாயி முறியடித்து விட்டதாம்.
ஜூலை 5ம் தேதி ஈகா படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. தொடக்க வசூலில் அது சாதனை படைத்தது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதல் வாரத்தில் அப்படம் ரூ. 3 கோடியை வசூல் செய்தது.

அதேசமயத்தில் இதே காலகட்டத்தில் ஜுலாயி படத்தின் வசூல் ரூ. 3.70 கோடியாக வசூலாகியுள்ளதாம்.
இருப்பினும் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மாத வசூல் சாதனையை ஈகா படம்தான் வைத்துள்ளதாம். இப்படம் இதுவரை ரூ. 5.98 கோடியை வசூலித்துள்ளதாம். ஆனால் ஜுலாயி படம் இதே ரேஞ்சுக்கு ஓடினால், 20 நாட்களிலேயே ஈகா படத்தின் ஒரு மாத வசூல் சாதனையை முறியடித்து விடும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக