பெங்களூரில் செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் ஒருவர் வடகிழக்கு
மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் 20,000
எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
கர்நாடக
மாநிலம் பெங்களூரில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக
வன்முறையைத் தூண்டும் வகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பிய
உள்ளூர்வாசிகள் அனீஸ் பாஷா(26), அவரது கூட்டாளிகள் தஹ்சீன் நவாஸ்(32)
மற்றும் சல்மான் கான்(22) ஆகிய 3 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
முதல் கட்ட விசாரணையில் செல்போன் ரிப்பேர் செய்வதில் கில்லாடியான அனீஸ்
பாஷா பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு
எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும்
எம்.எம்.எஸ். அனுப்பியது தெரிய வந்துள்ளது.கைதான மூவரும் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். குறித்து விவரம் அறிய பெங்களூர் போலீசார் சைபர் தடயவியல் ஆய்வகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
பாஷா செல்போன்களை ரிப்பேர் செய்வதில் திறமையானவர். முன்னதாக பல்வேறு வழக்கு விசாரணையின்போது செல்போன்களில் இருந்து தகவல் பெற நாங்கள் பாஷாவின் உதவியை நாடியுள்ளோம். பாஷாவின் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை சைபர் தடயவியல் ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம்.
பாஷாவுக்கு இந்த எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை அனுப்பிய நான்காவது நபரைத் தேடி வருகிறோம். அந்த நபர் அனுப்பியதைத் தான் பாஷாவும், அவரது கூட்டாளிகளும் மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த அந்த நான்காவது நபர் சிக்கினால் தான் பல்வேறு தகவல் கிடைக்கும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக