ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

Air Hostess கீதிகா ஷர்மா தற்கொலைக்கு அமைச்சர் தான் காரணம்

Haryana minister booked for suicide of ex-MDLR Airline employee, CM Bhupinder Singh Hooda 
தற்கொலைக்கு முழுக்க முழுக்க அமைச்சர் கோபால் கண்டா தான் காரணம் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


என்னுடைய தற்கொலைக்கு அரியானா அமைச்சர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு முன்னாள் விமான பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்.
டில்லியை சேர்ந்த கீதிகா ஷர்மா என்பவர் தனியார் விமானம் ஒன்றில் விமான பணிப்பெண்ணாக வேலைப்பார்த்துள்ளார். இந்த தனியார் விமானம் அரியானா உள்துறை அமைச்சர் கோபால் கண்டாவுக்கு சொந்தமானதாகும். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விமான ஊழியர்கள் போராட்டம் போன்ற பிரச்னைகளால் கீதிகா தனது வேலையை கடந்தமாதம் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அமைச்சர் தன்னை தொடர்ந்து வேலையில் இருக்கும்படி மிரட்டியதாகவும், துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டில்லியில் உள்ள தனது வீட்டில் கீதிகா ஷர்மா தற்கொலை செய்து கொண்டார்.


கடிதம் கண்டெடுப்பு :
கீதிகாவின் தற்கொலையை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், உடன் அவர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அத‌ில் தொடர்ந்து என்னை வேலையில் இருக்க சொல்லி துன்புறுத்தியதாகவும், அவரின் துன்புறுத்தல் தாங்க முடியாமலேயே தான் தற்கொலை செய்வதாகவும், தன்னுடைய தற்கொலைக்கு முழுக்க முழுக்க அமைச்சர் கோபால் கண்டா தான் காரணம் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் வாக்குமூலம்: மீண்டும் வேலையில் சேரும்படி கீதிகாவை அமைச்சர் கோபால் கண்டா கட்டாயப்படுத்தியதாகவும், இல்லாவிட்டால் அவரை வேறெங்கும் வேலை செய்ய விடமாட்டோம் என கோபால் கண்டா மிரட்டியதாகவும் கீதிகாவின் சகோதரர் கவுரவ் போலீஸ் விசாரணையின் போது தெரிவித்து இருக்கிறார்.

அமைச்சர் மீது வழக்கு பதிவு : கீதிகாவின் கடிதத்தை ஆதாரமாக கொண்டு, அவரை துன்புறுத்தியது மற்றும் தற்கொலைக்கு தூண்டியது போன்ற காரணங்களுக்காக அரியானா அமைச்சர் ‌கோபால் காண்டா மீது 306 பிரிவின் கீழ் டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விரைவில் அவர் கைது செய்யப்பட இருக்கிறார்.

அமைச்சர் மீது நடவடிக்கை உறுதி - முதல்வர் : இதனிடையே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு வலியுறுத்தி இருந்தார் ஓம் பிரகாஷ் சாவ்லா. அதற்கு முதல்வர் பூபிந்தர் ஹூடாவும் அமைச்சர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக