வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா! ஜெ.வை அனுமதிக்கக் கூடாது

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா 08.09.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் கலந்துகொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விழாவில் அவர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலிடம் வழக்கறிஞர்கள் 29.08.2012 அன்று மனு ஒன்றை அளித்தனர்.இந்தநிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறியதாவது, தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக