வெள்ளி, 27 ஜூலை, 2012

Tamanna தெலுங்கு, இந்தி மொழி படங்களில் கவனம்


கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய தமிழ் படங்களை ஏற்காமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளாதது ஏன் என்று கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறேன். அவை அசத்தலான படங்கள். தமிழைப் பொறுத்தவரை நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையாக இருந்தால் கேட்கிறேன். ஆனால் எனக்கு பொருத்தமான வேடங்கள் இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். தமிழ் படங்களுக்கு தகுந்த நேரம் ஒதுக்குவதில் ஆசை இருக்கிறது. தமிழ் படங்கள்தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்து என்னை அடையாளம் காட்டியது. தமிழில் நடிக்க விருப்பமில்லாமல் இருப்பதாக யார் கூறியது?
கோலிவுட் இண்டஸ்ட்ரியை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். என்னுடன் நடித்த கோலிவுட் நடிகர்களுடன் இப்போதும் நான் தொடர்புகொண்டு பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சென்னையில் இருக்கும்போது எனது வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன். அடுத்து இந்தி படத்தில் நடிக்க உள்ளேன். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக