போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
வினவு.comபோலீசார் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தனியார் பள்ளிகள், கல்லூரிகளை அரசுடைமையாக்கு! அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கு! போன்ற முழக்கங்களை முன்வைத்து 28.06.2012 காலை டிபிஐ யை முற்றுகையிட்ட 250க்கும் மேற்பட்ட பு.மா.இ.மு தோழர்களை போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி கைது செய்து சிறையிலடைத்துள்ளது.சிறுவர்கள், குழந்தைகள் என்றும் பாராது, போலீசார் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பு.மா.இ.முவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், எமது போராட்டம் வகுப்புகளைப் புறக்கணிப்பது என்பதோடு மட்டுமல்லாது, வீதியிலும் இறங்கிப் போராடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இது போன்று திருச்சி ஈ.வே.ரா கல்லூரியிலும் மாணவர்கள் போலிசு தாக்குதலைக் கண்டித்து வகுப்புக்களைப் புறக்கணித்து போராடி வருகின்றனர். விழுப்புரத்தில் பு.மா.இ.மு தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்னும் பல இடங்களில் மாணவர்கள் இந்த தாக்குதலைக் கண்டித்து போராடி வருகின்றனர்.
_________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக