வியாழன், 12 ஜூலை, 2012

நீதிபதி: pinky பெண்தான் அவரால் கற்பழிக்க முடியாது

 Pinki Pramanik Incapable Rape கற்பழிக்கக் கூடிய அளவுக்கு பிங்கியிடம் திறன் இல்லை-நீதிபதி



கொல்கத்தா: கற்பழிப்பை நிகழ்த்தக் கூடிய அளவுக்கு பிங்கியிடம் திறன் இல்லை என்பது முதல் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வருவதால் அவருக்கு கொல்கத்தா கோர்ட் ஜாமீன் அளித்துள்ளது.
கற்பழிப்புப் புகாரில் சிக்கி கைதாகி நேற்று ஜாமீ்னில் விடுதலையானார் பிங்கி. அவருக்கு ஆதரவாக விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஜோதிர்மாயி சிக்தர், பைசுங் பூதியா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிங்கியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை குறித்த அறிக்கைகள் பராசாத் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் வழங்கிய நீதிபதி நிர்மல்குமார் கோஷல், பிங்கிக்கு கற்பழிக்கக் கூடிய அளவுக்கு திறன் இல்லை என்பது முதல் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது தெரிய வருகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக கூறியுள்ளார்.
ஆனால் இந்தத் தீர்ப்புக்கு பிறப்பிக்கப்பட்டபோது நீதிபதியிடம் டிஎன்ஏ சோதனை முடிவுகள் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கு. டிஎன்ஏ சோதனையில் பிங்கிக்கு ஆண்களுக்கான குரோமோசோம்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
பிங்கிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்ட பின்னர் அன்று மாலையில்தான் அவரிடம் டிஎன்ஏ சோதனை முடிவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக பிங்கிக்கு நடந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், பிங்கிக்கு ஆண்குறி போன்ற எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில்தான் நீதிபதி, பிங்கிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிங்கி மீது புகார் கொடுத்துள்ள பெண்ணுக்கும் நீதிபதி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகள் ஒன்றாக வசித்து விட்டு இப்போது கற்பழிப்புப் புகார் கூறுவதில் அர்த்தமே இல்லை. 3 ஆண்டுகளாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறும் அப்பெண், தனது சம்மதத்துடன்தான் உறவு வைத்துக் கொண்டது இதன் மூலம் நிரூபணமாகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக