திங்கள், 2 ஜூலை, 2012

நித்தியானந்தா Night Clubக்கு ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டு

ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ்

சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்:
2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தேன். அப்போது 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். "குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களால் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு" என்று அவர் என்னிடம் கூறினார்.

கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, "குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்" என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன்.

பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை "பெர்சனல் சேவை செய்ய" போகுமாறு கூறினார். அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்" என்று கூறி அனுபவித்தார்.

தேவி...தாசி...

மேலும் "இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி" என்று கூறினார்.

இதேபோல் ஏற்காடு கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி" என்று கூறி அனுபவித்தார்.

ராவா சரக்கு....

2006-ம் ஆண்டில் பிடதி ஆசிரமத்தில் இருந்தபோது அவர் தனது காவி உடைகளுக்கு கீழே மதுபாட்டில் வைத்திருப்பதை எடுத்து வரச் சொன்னார். நான் எடுத்துக் கொடுத்ததுதான் மாயம்.. கடகடவென "ரா"வாகவே ஊற்றிய கையோடு என் வாயிலும் ராவாக ஊற்றிவிட்டார். ஆனால் கட்டாயப் படுத்தி வாயில் ஊற்றிவிட நான் மயங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்தபோது நிர்வாணமாகவே கிடந்தேன்.

2006-ம் ஆண்டு வாரணாசிக்கு சென்றபோது அவர் விஷ்வம் ஹோட்டலில் தங்கியிருந்தார். நாங்கள் ஹோட்டல் பிளாசாவில் தங்கினோம். நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து விருப்பம் இல்லாமலேயே அனுபவித்தார். வாரணசாமியில் "தாசி" பட்டம் கொடுத்து அதற்கு ஒரு விளக்கம் கூறி அனுபவித்தார்.

2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போனது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டுக் கொண்டு நைட் கிளப்புக்கு அழைத்துச் சென்று குத்தாட்டம் போட்டார். அங்கேயும் ஜீவன் முக்தி என்ற பெயரில் அனுபவித்தார். இதே கதைதான் அமெரிக்காவிலும் நடந்தது.

கும்பமேளாவில் கும்மாளம்
2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்ற போதும் கூட என்னை சும்மா இருக்கவிடவில்லை. புனிதமான இடத்தில் உடலுறவு கொள்வதால் சக்தி கிடைக்கும் என்று கூறி டெண்ட்டில் வைத்தே அனுபவித்தார்.
அமெரிக்காவுக்கு சென்ற போது நான் உடன்பட மறுத்த நாட்களில் ஒரு மனநோயாளி போல் சாடிஸ்டாக நடந்து கொண்டு அடித்திருக்கிறார். அமெரிக்க சீடரான விநய் பரத்வாஜையும் இப்படித்தான் கெடுத்திருப்பதை அறிந்து கொண்டேன். அதன் பின்னர்தான் லெனினுடன் சேர்ந்து நித்தியானந்தாவின் பெட்ரூமில் கேமராவை வைத்தோம் என்று ஆர்த்திராவ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக