திங்கள், 2 ஜூலை, 2012

IAS IPS தேர்வு: கேள்வித் தாள் தமிழ் இடம் பெற பிரதமருக்கு கலைஞர் கடிதம்

 அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ். மற்றும் மத்திய பணிகளுக்கான தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கேரிக்கை விடுத்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். மற்றும் மத்திய பணிகளுக்கான தேர்வு மத்திய தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது.
இதற்கான கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெறுகின்றன. இதனால் இந்தி பேசுபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
எனவே தமிழக மாணவர்களும் பயன் பெறும் வகையில் கேள்வித்தாளில் தமிழ் இடம் பெற ஆவன செய்ய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக