வெள்ளி, 27 ஜூலை, 2012

FaceBook க்கின் பங்கு எதிர்பாராத சரிவு

பேஸ்புக்கின் எதிர்பாராத சரிவு! புதிய விளம்பர சேவை கவிழ்த்து விட்டதா?

Viruvirupu
பலரும் எதிர்பார்த்திராத (மிகச் சிலரே ஊகித்த) வகையில் சரிவைச் சந்தித்திருக்கிறது ஃபேஸ்புக். இவர்களது வருமான வளர்ச்சியில் வேகத் தடை போடப்பட்டுள்ளது என்பது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரவு செலவு கணக்கு விபரங்களில் இருந்து தெரியவருகிறது. விபரங்கள் வெளியானதையடுத்து, பேஸ்புக் ஷேர்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தமது சார்பில் வெளியிடும் ‘வருமான எதிர்பார்ப்பு’ (financial forecast) வெளியிடுவதையே பேஸ்புக் தவிர்த்துள்ளது. இது, முதலீட்டாளர்களின் மனங்களில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் சமீப நாட்களில் துவங்கிய விளம்பர கட்டண சேவை, தமது வளர்ச்சியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்த்தது அந்த நிறுவனம். ஆனால், அவர்கள் ஆரம்பித்த விளம்பர கட்டண சேவையே, அவர்களை கவிழ்த்து விட்டது என்பதே தற்போது பைனான்சியல் வட்டாரங்களில் கூறப்படும் கணிப்பு.

100 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு உடையதாக கருதப்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்த பேஸ்புக், இரண்டாவது காலாண்டில் வெறும் 1.18 பில்லியன் ரெவென்யூ அதிகரிப்பையே காட்டியிருக்கிறது. இந்த சைஸ் நிறுவனம் ஒன்றின் மிகச் சாதாரண வளர்ச்சியே இது.
கடந்த மே மாதம் பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விலையில் இருந்து சரிந்து, பழைய பெறுமதியின் மூன்றில் ஒரு பங்கு வரை வீழ்ந்திருக்கிறது பேஸ்புக் பங்கின் விலை (சுமார் 38 டாலர்). அதைவிட ஆபத்தாக, ஆஃப்டர்-அவர்ஸ் ட்ரேடிங்கில் 22 டாலர் அளவுவரைகூட சென்று, முதலீட்டாளர்களை அதிர வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக