செவ்வாய், 10 ஜூலை, 2012

CBI சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் சரண்

 Anbumani Surrender Medical College Case மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி

டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அன்புமணிக்கு 2 முறை சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டிப்பார்த்தனர். ஆனாலும் அன்புமணி ஆஜராகவில்லை.
இதையடுத்து அன்புமணிக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரை 20ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ஆஜரானார். அடுத்த விசாரணைகளில் தொடர்ந்து தாம் ஆஜராவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து அவர் மீதான வாரண்ட்டை நீதிபதி ரத்து செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக