செவ்வாய், 3 ஜூலை, 2012

பிரணாப் முகர்ஜி வேட்பு மனு ஏற்கப்பட்டது!

 Office Profit Allegation Pranab Reply Today
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது பிரணாப் முகர்ஜி, ஆதாயம் தரும் பதவியில் இருந்தார் என்பது அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி.ஏ.சங்மாவின் ஆட்சேபனை. இதையடுத்து பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் அதிகாரியான அக்னிகோத்ரி விளக்கம் கோரியிருந்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக பி.ஏ.சங்மாவின் வேட்புமனுவில் சில ஆட்சேபனைகளை பிரணாப் முகர்ஜி தரப்பு கூறியிருந்தது. அதை நிராகரித்து அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
பிரணாப் முகர்ஜி மற்றும் பி.ஏ.சங்மா ஆகிய இருவரது வேட்புமனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரும் 19-ந் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக