புதன், 11 ஜூலை, 2012

போலீசார் கட்டிப்புரண்டு சண்டை லஞ்ச பணத்தை பங்கு பிரிப்பதில்

 இது தான் டா போலீஸ் ........... அவர்கள் புகை படம் , தொலை பேசி எண்களையும் போடவும் ...
ஊத்துக்கோட்டை:போலீஸ் நிலையத்தில் பணத்தை பங்கு பிரிப்பதில் போலீஸார் இருவரிடையே மோதல் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை போலீஸ் உட்பிரிவில் ஊத்துக்கோட்டை, வெங்கல், ஆரணி, பெரியபாளையம், பென்னலூர்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழக - ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையம். இங்கு ஏழு சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மற்றும், 11 போலீசார் பணியில் உள்ளனர்.இந்த போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில், 77 கிராமங்கள் உள்ளன. தமிழக - ஆந்திர எல்லையில் இந்த போலீஸ் நிலையம் அமைந்துள்ளதால், தமிழகத்தில் இருந்து திருட்டு மணல், ரேஷன் அரிசி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து மலிவுவிலை மது, செம்மரக்கட்டை ஆகியவை கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.
கட்டிப்புரண்டு சண்டை

இதில் இங்கு பணியாற்றும் போலீசாரை சம்பந்தப்பட்டவர்கள் "கவனிப்பதால்' கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பயமின்றி செயல்படுகின்றனர். இதில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் போலீஸ் தலைமைக் காவலர் வாசு மற்றும் போலீஸ் பாபு இருவருக்கும் இடையே பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.வாய்த்தகராறு உச்சத்தை அடைந்தது. உடனிருந்த போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இருவரும் போலீஸ் நிலையத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.,ரூபேஷ்குமார்மீனா, சம்பந்தப்பட்ட வாசு, பாபு ஆகிய இரு போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.போலீஸ் நிலையத்திலேயே போலீசார் கட்டிப் புரண்டு சண்டை போட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Srinath - Seattle,யூ.எஸ்.ஏ
2012-07-11 03:27:45 IST Report Abuse
வெட்கங்கெட்டு வாங்கியது லஞ்சம். அதனைப் பிரிப்பதில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் இடத்தில் இருக்கும் போலீசாராம். இவர்களுக்குத் தண்டனை இடமாற்றமாம். நாடும், மக்களும் எந்தளவுக்குக் கேடுகெட்டுப் போயிருக்கிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம் இதைவிட வேறென்ன இருக்கமுடியும். இவர்கள் லஞ்சம் வாங்கியது உண்மை என்றால் உடனடியாகப் பதவியை விட்டு டிஸ்மிஸ் செய்வதை விடுத்து மென்மையான தண்டனை போல இடமாற்றமாம். கடும் தண்டனைகள் மட்டுமே குற்றங்களைக் களையும் என்று உலகம் முழுவதும் புரிந்து கொண்டுவிட்ட உண்மை. ஆனால் ஊழலிலும், லஞ்சத்திலும் ஊறியுள்ள நம் நாட்டவர்கள் ஒருவரை ஒருவர் காக்க முயல்வது கலியின் கொடுமையே.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக