ஞாயிறு, 22 ஜூலை, 2012

தானாக வந்த அஜித் கால்ஷீட்! அதிர்ச்சியில் இயக்குனர்!

அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 பல விதமான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. 
அதைவிட தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருப்பது அஜித் முன்பு போல இல்லை என்பது தான்.பில்லா-2 ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கிண்டல், கேலி என அஜித் புதுமாதிரியாக இருந்ததாக படக்குழுவினர் கூறியிருந்தனர். சமீபத்தில் வெளியான ’நான் ஈ’ படத்தை பார்த்த அஜித்துக்கு படம் ரொம்ப பிடித்துவிட்டதால், இயக்குனர் ராஜமௌளிக்கு ஃபோன் செய்து பாராட்டினார். சினிமா துறையில் அஜித் தொடர்பில் இருப்பது சிலருடன் மட்டும் தான். அந்த வகையில் சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவா ஒரு காலத்தில் அஜித்துடன் நல்ல பழக்கத்தில் இருந்துவந்தார். அப்போது அஜித்திடம் ஒரு கதை சொல்லி கால்ஷீட்டும் கேட்டிருந்தார். அதன்பிறகு ’சிறுத்தை’ சிவா தெலுங்கிற்கு சென்று விட்டதால் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனர்.
லுங்கில் சிவா இயக்கிய படம் சுமாரான ஹிட் தான் என்றாலும், சென்னை வந்து அஜித்தை அணுகிய போது, மங்காத்தா ஹிட்டின் மூலம் அஜித் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார்.  சமீபத்தில் சிவாவின் மொபைல் ஃபோனுக்கு அஜித்திடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது.சிவா அந்த ஃபோன் காலை எடுத்து பேசிய போது “என்ன சார் எப்படி இருக்கீங்க. என்கிட்ட ஒரு கதை சொல்லியிருந்தீங்களே, அத முழுசா எழுதி முடிச்சிடுங்க. விஷ்ணுவர்தன் படம் முடிஞ்சதும் உங்களுக்கு தான் கால்ஷீட்” என்று சிரித்துக்கொண்டே கூறினாராம் அஜித். அதிர்ச்சியில் உரைந்த சிவா தானாக இந்த உலகத்துக்கு வந்துவிட்டாராம்.பில்லா-2 அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டிவிட்டதால் அடுத்தடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக