சென்னை, ஜூலை.27- இந்தியாவில்
தரமான சட்டக் கல்வி கற்றுத் தரப் படுவதே இப்போதைய தேவையாக இருக்கிறது
என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பேசினார்.
சென்னை உயர்நீதிமன் றத்தின் 150-ஆவது
ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் தொடர்ச் சியாக, பெண் வக்கீல்கள் சங்கத்தின்
சார்பில் சொற் பொழிவு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு
உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசிய தாவது:-
பெண்களுக்கு எதி ரான குற்ற வழக்குகளால்
இந்திய நீதிமன்றங்கள் நிரம்பி வழி கின்றன. வரதட்சணைக்காக பெண்ணை தீவைத்து
கொலை செய்தல் போன்ற குற்றங்கள் சர்வ சாதாரண மாகி தடையில்லாமல் வளர்கின்றன.
உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி
மொத்த ஜனத்தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உள்ளது. இந்தி யாவில்
உள்ள பள்ளிகளில், இடைநிற்றல் குழந்தை களைக் கவனித்தால் அதில் 70 சதவீதம்
பெண் குழந்தைகளே. இந்தியாவில் ஒவ் வொரு மனிதனுக்கும் அரசியல் சாசனம்
கொடுத்துள்ள உரிமை கள் முழுமையாக சென் றடைவதை உறுதி செய் வதுதான்
நீதித்துறையின் மிகப் பெரிய சவாலாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கமும், அறிவு
வளர்ச்சியும் ஏற்பட்டுள் ளதால், நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தாக் கல்
ஆகின்றன.
ஆனால் போதிய நீதி மன்றத்தில் இல்லாமை,
நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள், உள்கட் டமைப்பு வசதிகளின் குறைபாடுகள்
போன் றவற்றால் வழக்குத் தேக்கம் மலைபோல் குவிகிறது. இதனால் வழக்கு விசாரணை
நீண்டு கொண்டே செல் வதோடு, அளிக்கப்படும் தீர்ப்பும் முழுமை இல் லாமல்
போய்விடுகிறது.
இந்தியாவின் தற் போதைய தேவையே தரமான
சட்டக் கல்வி தான். கெட்ட விதைகள் கெட்டதையே விளை விக்கும். நல்ல விளைச்
சலை எதிர்பார்க்க முடியாது. சட்ட மாண வனுக்கு தரமான கல்வி அளிக்கப்படும்
நிலை யில். அவன் தரமான வக்கீலாகவோ அல்லது தரமான நீதிபதியாகவோ மாறுவான்.
நல்ல வக் கீலும், நல்ல நீதிபதியும் வழக்குகளை உடனுக் குடன் தீர்ப்பார்கள்.
வக்கீல்கள் அடிக்கடி நடத்தும்
நீதிமன்றபுறக் கணிப்பு போராட்டத் தில், நியாயமான கார ணங்கள் தென்பட வில்லை.
இது வழக்கு தாரர்களுக்குதான் பெரிய இன்னலாக இருக்கும். இதை உச்ச
நீதிமன்றமும் பலமுறை கண்டித்துள்ளது.
உச்சநீதிமன்றம் என் றாலும் உயர்நீதிமன்றம்
என்றாலும், அங்கு அறிவு முதிர்ச்சியான நீதிபதி மட்டுமே தேவை யாக
இருக்கவில்லை. பொறுமை, ஒருமைப் பாடு, ஆற்றல் போன்ற பன்முகத்தன்மை கொண்ட
நீதிபதிகள் தான் இன்றைய தேவை யாக உள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆண் வக்கீல் களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண் வக்கீல்கள் இருப்பதை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை நீதிபதி
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-
நீண்ட போராட்டத் துக்குப் பின்புதான்
வக்கீல் தொழிலுக்கு பெண்கள் வந்தனர். ஆயிரத்து 876 முறை விண்ணப்பித்த
பிறகுதான் அமெரிக் காவில் ஒரு பெண் வக்கீலாக தன்னை பதிவு செய்ய முடிந்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தர விட்ட
பிறகே 24.8.21 அன்று ஒரு பெண் தன்னை வக்கீலாக பதிவு செய்ய முடிந்தது.
இந்தியாவி லேயே, கேரளா உயர் நீதிமன்றத்தில் 1959-ம் ஆண்டில்தான் முதன்
முதலாக பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் முதல் பெண்
நீதிபதி 1989-ம் ஆண்டு நிய மிக்கப்பட்டார்.
தற்போது இந்தி யாவில் 54 பெண் நீதி பதிகள்
(உயர்நீதிமன் றம்)உள்ளனர். அனைத்து உயர்நீதி மன்றத்தையும் விட சென்னை
உயர்நீதி மன்றத்தில்தான் அதிக மாக 7 பெண் நீதிபதி கள் உள்ளனர். இத னால்
இந்த உயர்நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இருப்ப தில் நான் பெருமை அடை
கிறேன்.
இவ்வாறு அவர் பேசினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக