வேறு எந்தக் கட்சிகளையும்விட ‘லைவ்’வாக இருக்கும் கட்சி,
தி.மு.க.தான். காரணம், கட்சிக்குள் வருடம் 365 நாளும் நடக்கும் கோஷ்டி
மோதல்கள். (தமிழக காங்கிரஸ் கட்சியையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
ஆனால், அங்கே ரத்தமும் சிந்தும்)
தி.மு.க.-வில் லேட்டஸ்ட் பரபரப்பு, கனிமொழி கோஷ்டியினரின் கை ஓங்குகிறது என்பதே!
தி.மு.க. தலைவர் கருணாநிதியே, கனிமொழி கோஷ்டிக்கு ஆதரவாக உள்ளார் என்ற
பேச்சு சமீப நாட்களாக தி.மு.க. வட்டாரங்களில் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஸ்டாலின் மீது கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள ‘ஏதோ’ மனக் கசப்பு காரணமாகவே,
கனிமொழி கோஷ்டியினருக்கு கட்சிக்குள் ஒரு புஷ் கொடுக்கிறார் கருணாநிதி
என்றும் கட்சிக்குள் கூறுகிறார்கள்.சில நாட்களுக்கு முன், கனிமொழிக்கு ஆதரவாக உள்ள சிலரது ரகசியக் கூட்டம் ஒன்று சென்னையில் ஒரு இல்லத்தில் நடைபெற்றது எனவும், ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆதரவு எம்.பி. ஒருவர் அதில் கலந்து கொண்டனர் என்றும் தெரியவருகிறது.
தி.மு.க.-வின் விழுப்புரம் பகுதி முக்கியஸ்தர் ஒருவர் இந்த ரகசிய கூட்டம் நடந்ததை எப்படியோ துப்பறிந்து பிடித்துவிட்டார். அவர் அதை ஸ்டாலினிடம் வத்தி வைத்துவிட்டார் என்கிறார்கள். அதே நேரத்தில், தி.மு.க.-வின் சென்னை முக்கியஸ்தர் ஒருவர், இதே விவகாரத்தை கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார். அப்போது கருணாநிதியிடம் இருந்து கிடைத்த ரெஸ்பான்ஸ்தான் அவரை அதிர வைத்ததாம். “அதனாலென்ன.. ஆலோசனைக் கூட்டம்தானே நடத்துகிறார்கள். சதி ஒன்றும் செய்யவில்லையே.. தாராளமாக நடத்திவிட்டு போகட்டும்” என்றாராம் கருணாநிதி. இந்த விபரத்தை எமக்குச் சொன்ன தி.மு.க. பிரமுகர், “கனிமொழி ஆதரவாளர்களின் ரகசிய சந்திப்பு, தலைவருக்கு தெரிந்தே தான் நடந்திருக்கிறது” என்று அடித்துச் சொல்கிறார்.
ஸ்டாலினின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், கருணாநிதி சொன்னதுபோல, “அதற்கென்ன, தாராளமாக நடத்திவிட்டு போகட்டுமே” என்பதாக இருக்காது என்பது மட்டும் தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக