திங்கள், 9 ஜூலை, 2012

தி.மு.க., மீது எரிச்சலை கக்குவது என்றால் இனிக்கிறது

 இந்திய கம்யூனிஸ்ட் தா பாண்டியன் சொல்லி இருந்தால் நீங்கள் அதை பெரியதாக எடுத்துகொள்ளமாட்டீர்கள் ஏனென்றால் தா பாண்டியன் இப்போது அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராகவே செயல்ப்படுகிறார் என்ன்பது தமிழக மக்கள் அறிந்த ரகசியம்
சென்னை: ""தி.மு.க., மீது எரிச்சலைக் கக்குவது என்றால், எப்படித் தான் இனிக்குமோ தெரியவில்லை. தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும், சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கவில்லை,'' என, மார்க்சிஸ்டுகளை, கருணாநிதி தாக்கியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில், "மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டபோது, வெறும் அறிக்கை மட்டுமே விட்டும், பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்திய, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிருப்தி: இந்த கட்டுரையால் அதிருப்தியடைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, "உடன்பிறப்பு'களுக்கு எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது: "என்ன காரணத்தாலோ, தி.மு.க., என்றால், ராமகிருஷ்ணனுக்கு பிடிக்காது. தி.மு.க., ஆளுங்கட்சியாக இல்லை. ஆளும் கட்சியை குறை சொல்வதை விட, தி.மு.க., மீது எரிச்சலைக் கக்குவது என்றால், எப்படித்தான் இனிக்குமோ தெரியவில்லை.

மனம் நொந்து...: கட்டுரையில் முதல் பகுதியில், தி.மு.க., மீது எந்த அளவுக்கு வெறுப்பைக் கக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு கக்கிவிட்டு, இரண்டாவது பகுதியில், அ.தி.மு.க., பற்றி வேண்டா வெறுப்பாக, அவர்களைப் பற்றியும் எழுத வேண்டியுள்ளதே என, மனம் நொந்து எழுதியுள்ளார். மக்கள் பிரச்னைக்காக கவலைப்படாமல், கட்சி முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும், அதற்காக மட்டும் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க., மீது, தற்போது தான், பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், வராததுமாக, கைது நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ஓராண்டு காலமாக, வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த பிறகும், மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது தொடர்ந்ததால், வேறு வழியின்றி, பழிவாங்கும் போக்கை கண்டித்தும், மக்கள் பிரச்னைகளை இணைத்தும், செயற்குழு கூடி, சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை, ராமகிருஷ்ணன் மறைத்துவிட்டு, அறிக்கை விட்டிருப்பது சரிதானா என்பதை, அந்த கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். மொத்த நில அபகரிப்பு வழக்குகள் 703ல், அ.தி.மு.க.,வினர் மீது, 42 வழக்கு தான் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதிலிருந்தே, தி.மு.க.,வினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கை தெரிகிறது. தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னை சந்தித்து, சிறுதாவூரில் நில ஆக்கிரமிப்பு பற்றி புகார் கொடுத்தனர். விசாரணை கமிஷன் அமைத்து, அறிக்கையும் வந்துள்ளது. இதன் மீது, அ.தி.மு.க., நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி, மவுனமாக இருக்கின்றனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக