திங்கள், 2 ஜூலை, 2012

ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் மாணவர்கள்

t;மதுரை டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மொபைல் போனுக்கு, சில நாட்களாக ஆபாச எஸ்.எம்.எஸ்., வந்ததோடு, பேசியவரின் பேச்சும் ஆபாசமாக இருந்தது.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் புகார் செய்தார். 
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், எஸ்.ஐ., சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்ததில், அந்த நபர் பல பெண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், பேசியதும் தெரியவந்தது. இதற்காக, 10க்கும் மேற்பட்ட "சிம்' கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். மொபைல் போன் டவர் உதவியுடன், மதுரை தெற்குவாசல் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த கிஷோரை,18, (பெயர் மாற்றம்) கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு மொபைல் போன்கள், ஒன்பது "சிம்' கார்டுகள், இரண்டு "மெமரி' கார்டுகளை பறிமுதல் செய்தனர். பிளஸ் 2வில், 1100 மதிப்பெண் பெற்ற கிஷோர், பொறியியல் படிப்பில் சேருவதற்காகக் கவுன்சிலிங்கில் பங்கேற்க இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 வரை கருக்கு அந்த ஆசிரியை வகுப்பு எடுத்துள்ளார். அப்போதே, பெண்களுக்கு "ஜாலி'யாக ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புவதை கிஷோர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதை ஆசிரியை கண்டித்துள்ளார். இதற்குப் பழி வாங்கவே, அவருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார், என்றனர்.சில வாரங்களுக்கு முன், மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் ஒருவர், தனது சகதோழியைக் கண்டித்த ஆசிரியையும், மற்றொரு ஆசிரியையும் இணைத்து, ஓரின சேர்க்கைக்கு அழைப்பதாகக் கூறி, "பேஸ்புக்'கில் ஆபாசமாகச் சித்தரித்தார். தேர்வு முடிவு வெளியானபோது, அவர் கைது செய்யப்பட்டார். பெற்றோருக்கு அடுத்து, மதிக்கப்பட வேண்டிய ஆசிரியைகளுக்கு, மாணவர்கள் "செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பது, தற்கால மாணவர்களின் "வக்ர' எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக