இந்தி நடிகர் நசிருதீன் ஷாவின் இளைய மகன்
விவானுக்கும், கமல்ஹாசனின் மகள் அக்ஷராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக
இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் நீண்ட காலமாக
நட்புடன் இருந்து வருவதாகவும், இது காதலாக உருவெடுத்திருப்பதாகவும் அந்த
செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ஷராவுடன் விவான் அதிக நேரம் செலவிடுவதாகவும்
இத்தகவல்கள் கூறுகின்றன.இவர்கள் நட்புடன் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், காதல் புரிந்து வருவது வெகு சிலருக்கே தெரியுமாம். இருப்பினும் இதை விவான் மறுத்துள்ளார். இதுகுறித்து மிட்டேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நிச்சயம் இது காதல் அல்ல. நாங்கள் இருவருமே சிறு வயது முதல் பழகி வருகிறோம். எங்களது வாழ்க்கையில், ரொமான்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக