ஜெ.வை நம்ப வைக்க எனது இதயத்தை பிளந்து காட்டுவேன்...செங்கோட்டையன்
கோபிச்செட்டிப்பாளையம்:
ராமாயானத்தில், சீதையை நம்ப வைக்க தனது இதயத்தைப் பிளந்து காட்டினான்
அனுமன். அதேபோல இந்த இயக்கத்துக்காக நானும் எனது இதயத்தைப் பிளந்து காட்டத்
தயார் என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார் சமீபத்தில் கட்சிப்
பதவியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்ட
கே.ஏ.செங்கோட்டையன்.
பதவியை இழந்த நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் கம்பன் அறநிலை பொன் விழா ஆண்டு விழாவில் பங்கேற்றார் செங்கோட்டையன். அங்கு வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டும், பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
இறைவனுக்கு பல்வேறு இடர்பாடுகள் வரும் போது, இடர்பாடுகள் அனைத்தும் இறைவனால் சரி செய்யப்பட்டு, இறைவன் இறைவனாக இருக்கும் நிலைதான் ராமாயணத்தில் உள்ள கருத்து.
ராமனுக்கு பல்வேறு இடர்பாடுகள் வந்த போது, காட்டில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது, சீதை, ராவணனால் சிறை எடுத்துச் செல்லப்பட்டார். சீதையை தேடித் தேடி சோர்ந்திருந்த ராமன், சீதையை கண்டுவர அனுமானை அனுப்பினார்.
அவன் சீதையை கண்ட போது, "நீங்கள் ராமனால் அனுப்பப்பட்டவரா' என அனுமனிடம் சீதை கேட்டார். தான் ராமனின் உண்மையான தொண்டன் என்பதை நிரூபிக்க, தன்னுடைய மார்பை அனுமன் பிளந்து காட்டினான் அனுமன். அங்கே ராமர் தெரிந்தார். அனுமான் மார்பை பிளந்து, ராமனை திருவுருவத்தை காட்டிய பின், சீதை நம்பினாள், என ராமாயணத்தில் உள்ளது.
அதேபோல இந்த இயக்கத்துக்காக என்னுடைய மார்பை பிளந்து, முதல்வரிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்றார் அவர்.
கொடநாட்டில் முகாமிட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை, செங்கோட்டையனின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு எட்டியிருக்கும் என்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக