புதன், 11 ஜூலை, 2012

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:கலைஞரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது

ஈரோடு நகராட்சி மண்டபத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர்,தமிழக அரசியலை பொறுத்தவரை தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது. அவரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது. மற்றவர்களை காட்டிலும் கருணாநிதி மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. காங்கிரஸ் கட்சியை நான் உயிர் மூச்சாக நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி தமிழ்நாடடில் ஆட்சி க்கு வரவேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உள்ளது. எனவேதான் நான் கருணாநிதி பற்றி விமர்சனம் செய்தேன். இது தவிர்க்க முடியாதது. 1967-ம் ஆண்டுக்கு முன் காங்கிரசை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தார்கள். அதன் பிறகு காமராஜர் இறந்தபிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியவர் கருணாநிதி.
கடந்த தேர்தலில் நான் கோபியில் போட்டியிட்டு இருந்தால் இன்னும் கூடுதல் ஒட்டுகள் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் பிறந்த ஊருக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் ஈரோட்டில் போட்டியிட்டேன். தி.மு.க.வினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான பேர் கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த போராட்டத்தை அவர்கள் சிதைத்துவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஏன் என்றால் மின்சாரம் கட்டணம் உயர்வு பற்றி அவர்கள் முழுமையாக மக்களிடம் எடுத்து சொல்லவில்லை. மின்சார கட்டணம் இப்போது 2 மடங்கு உயர்ந்து உள்ளது. இதுபோல் முன்பு மீட்டர் கணக்கெடுத்த பின்னர் பணம் கட்டுவதற்கு போதிய அவகாசம் கொடுப்பார்கள். ஆனால் அப்போது மீட்டர் கணக்கெடுத்து 10 நாட்களுக்குள் பணம் கட்டவில்லை என்றால் அபராதம் போடுகிறார்கள். இதனால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மா அந்த பதவிக்கு தகுதியற்றவர். அ.தி.மு.க-தி.மு.க.வுக்கு அடுத்து 3 வது பெரிய கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. கடந்த தேர்தலில் அதிக இடங்களை பெற்ற தே.மு.தி.க. பெரிய கட்சி அல்ல’’என்று பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக