ஞாயிறு, 22 ஜூலை, 2012

போலீஸ் வாரிசுகள் எதுவும் பண்ணலாமா?

ஒரு விபத்து வேடிக்கை ஆகிறது! ஜூலை 7-ம் தேதி... நள்ளிரவு நேரம்.. மகாபலிபுரம் சாலையில் சீறிக் கொண்டு வந்தது அந்த ஹூண்டாய் ஐ.20 கார். அது எதிரே வந்த கார் மீது மோத, இரண்டு காரில் இருந்தவர்களுக்கும் காயம். இரண்டு தரப்பும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் விபத்து நடந்தாலும் இந்த விபத்தில் உண்டு ஒரு விசேஷம்! ''ஐ.20 காரை ஓட்டியது போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் மகன். அவருடன் மூன்று பெண்கள் வந்தார்கள். எதிரில் வந்த காரில் கிருஷ்ணா, டேனியல், கௌசிக், குமரகுரு ஆகிய நான்கு இளைஞர்கள் இருந்தார்கள். ஐ.20-யில் இருந்த மூன்று பெண்களுக்கும் பலத்த காயம். வண்டியை ஓட்டிய இளைஞருக்கும் சரியான அடி. ஆனால் தன்னைப் போலவே பெரிய பொறுப்புக்கு மகனும் வரவேண்டும் என்று நினைக்கும் போலீஸ் அப்பா, இதனை மறைப்பதற்கான வேலைகளில் மும்முரம் ஆனார். இந்த விபத்துக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர். போடவில்லை. இரண்டு காரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகாமல் மகாபலிபுரம் காவலர் குடியிருப்புக்குக் கொண்டு போனார்கள். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறைக்க முயற்சித்தது போலீஸ்.

இது பற்றிப் பலரும் பேச ஆரம்பித்ததும் இரண்டு நாள் கழித்து மெதுவாக எஃப்.ஐ.ஆரை போட்டது போலீஸ்.

அப்போதும் அந்த போலீஸ் அதிகாரியின் மகன் பெயர் அதில் இல்லை'' என்கிறார்கள்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமைதான் பரிதாபம். ''அடிபட்ட வலியை விட போலீஸ் டார்ச்சர்தான் அதிகமா இருக்கு. எங்க பிள்ளைங்க குணம் அடைஞ்சு வந்தா போதும். வேற எதுவும் கேட்காதீங்க'' என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் அந்தக் குடும்பத்தினர்.

போலீஸ் வாரிசுகள் எதுவும் பண்ணலாமா?
thanks vikatan + Mohanachandran ,Velacheri

saravan vijayan15 Hours ago

ஜாங்கிட் தான் சோக கீதம் இசைத்துக் கொண்டிருப்பவர். இவர் சோக கீதம் இசைப்பதன் காரணம் இவரின் புத்திரன் விக்ரம் சங்காராம் ஜாங்கிட் தான். இந்த விக்ரம் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐபிஎஸ் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.
என்ன இஷ்டைலா இருக்கறார் பாத்தீங்களா ?

ஜாங்கிட்டின் இளைய மகன் விக்ரம் ஜாங்கிட். இவர் படித்து முடித்து விட்டார். அவர் தந்தை ஜாங்கிட்டுக்கு இவரை எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரியாக்கி விட வேண்டும் என்று ஒரு தணியாத ஆசை. ஐபிஎஸ் என்ற பதவியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது ஜாங்கிட்டுக்கு அல்லவா தெரியும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக