முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
புதிய அணை கட்ட கேரள
அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அணையை பராமரிக்க
போன தமிழக அதிகாரிகளை கேரள அரசு தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் அணையை
பராமரிப்பது தொடர்பாக இரு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
செய்து இருந்தது. இம்மனு தொடர்பான விசாரணை இன்று வந்தது. அதில் அணையை
தொடர்ந்து தமிழக அரசே பரமாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினரின் அறிக்கையை கேரள அரசுக்கு வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினரின் அறிக்கையை கேரள அரசுக்கு வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக