ஞாயிறு, 29 ஜூலை, 2012

தேமுதிகவை உடைக்க அதிமுக முயற்சி?பிரேமலதாவுக்குச் சொந்தக்காரரான சங்கீதா

 Plot Break Dmdk Through Premalatha Relative Woman
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தக்காரரான சங்கீதா சீனிவாசன் என்பவர் மூலம் தேமுதிகவை உடைத்து அதிலிருந்து சில எம்.எல்.ஏக்களை அதிமுகவுக்குக் கொண்டு போக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
 இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த், சங்கீதாவை உடனே கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டாராம்.
பிரேமலதாவின் தந்தை வழி உறவுக்காரப் பெண்தான் இந்த சங்கீதா. இவர் திருவள்ளூரில் வசித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட தேமுதிக மகளிர் அணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். தற்போது இவரை கட்சியை விட்டு தூக்கி விட்டார் விஜயகாந்த்.

சங்கீதா சீனிவாசன் தூக்கப்பட்டது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெரும் குசும்பில் சங்கீதா ஈடுபட்டதால்தான் அவரை கட்சியை விட்டுத் தூக்கியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள்.
இவர் மூலம் தேமுதிகவை உடைக்க அதிமுக தரப்பில் முயன்றதாகவும், அதை அறிந்துதான் சங்கீதாவை விரட்டியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள். பூந்தமல்லி அதிமுக எம்.எல்.ஏ மணிமாறனும், சங்கீதாவும் நல்ல நண்பர்களாம், நெருக்கமான பழக்கம் கொண்டவர்களாம். ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் மணிமாறனைத்தான் அணுகுவாராம் சங்கீதா.
அந்த வகையில் சமீபத்தில் மணிமாறனை அணுகிய அவர் அதிமுகவுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை கட்சியின் உயர் மட்டத் தலை ஒருவரிடம் அழைத்துச் சென்றாராம் சங்கீதா. அவரோ, இப்போதைக்கு கட்சிக்கு வர வேண்டாம். மாறாக, உனது கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏக்களை இங்கு கொண்டு வா, சிறந்த முறையில் உன்னை நாங்கள் கவனிக்கிறோம் என்று அட்வைஸ் செய்தாராம்.
இதையடுத்து தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சிலருக்கு வலை விரித்தார் சங்கீதா. ஆனால் அவரது வலை விரிப்பு குறித்து விஜயகாந்த் காதுகளுக்குச் செய்தி போய் விட்டது. இதை அறிந்து அவர் கொந்தளித்துப் போனார். உடனே சங்கீதாவை கட்சியை விட்டும், பதவியிலிருந்தும் தூக்கி விட்டார்.
ஆனால் தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று கூறியுள்ளார் சங்கீதா. மேலும் தேமுதிகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பூந்தமல்லி மணிமாறனுக்கு எதிராக பிரசாரம் செய்தவள் நான். நான் எப்படி அவருக்கு நண்பராக இருக்க முடியும். இந்தக் கட்சிக்காக எனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ரோடுரோடாக அலைந்து பிரசாரம் செய்துள்ளேன். யாரோ தப்புத் தப்பாக சொல்லியுள்ளனர். அதைக் கேட்டு என்னை நீக்கியுள்ளனர். இதை ஜனநாயகக் கட்சி என்று நினைத்திருந்தேன், ஆனால் இது ஒரு கம்பெனி போல செயல்படுகிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.
தேமுதிகவிடம் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் சிலரை குறைந்தது ஒரு 7 பேரை கட்சியிலிருந்து இழுத்து விட்டால், விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பறி போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக