வியாழன், 26 ஜூலை, 2012

நடிகை சௌகந்தி: போலீசார் மட்டும் வராமல் இருந்திருந்தால்

ரோசா என ஆரம்பிக்கப்பட்டு குற்றாலமாகப் பெயர் மாற்றப்பட்ட படத்தில் நடிக்கும் புது நடிகை சௌகந்தி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் வந்து மீட்க வேண்டியதாகிவிட்டது.
சஞ்சய் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ரோசா' படம் தற்போது ‘குற்றாலம்' என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இதில் புது நடிகை சௌகந்தி, மீனு கார்த்திகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒருவர் ரோட்டோரம் படுத்து கிடந்தார். அவர் உடம்பில் ஆடை இல்லாமல் இருந்தது. மயக்க நிலையில் இருந்தார். முதியவரின் பரிதாப நிலையை கண்ட நடிகை சௌகந்தி, இரக்கப்பட்டு தனது புடவைகளில் ஒன்றை எடுத்து அவருக்கு போர்த்தி விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் சௌகந்தியை கேலி செய்தபடி, "நாங்களும் இதே மாதிரி துணி இல்லாமல் படுத்துக்கிறோம்... உன் புடவையை தருவியா கண்ணு..." என்று கேட்டு வம்பு பண்ண ஆரம்பித்தார்களாம். ஒரு கட்டத்தில் நடிகையை தொட்டு, கட்டிப்பிடிக்க முயல, அவர் அலற ஆரம்பித்தார்.
இயக்குனர் சஞ்சய் ராம் கலாட்டா செய்த மாணவர்களை கண்டித்தார். ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் மசியவில்லை. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தொல்லை கொடுத்த இளைஞர்களை விரட்டியடித்து சௌகந்தியை காப்பாற்றினர்.
இதுகுறித்து நடிகை சௌகந்தி கூறும்போது, "போலீசார் மட்டும் வராமல் இருந்திருந்தால், என் மானம் போயிருக்கும்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக