திங்கள், 16 ஜூலை, 2012

கலைஞர் சிதம்பரம் திடீர் சந்திப்பு ....அதிருப்தி?

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 7ம் தேதி, துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம், டில்லியில் பரதமரின் இல்லத்தில், ஐ.மு., கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஹமீது அன்சாரி அறிவிக்கப்பட்டார். அக்கூட்டத்தில், தி.மு.க., சார்பல், பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்று, தனது கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.
அதிருப்தி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பல் போட்டியிடும் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கேட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஏற்கனவே வந்தார். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பல் போட்டியிடும் வேட்பாளர் குறித்து, தன்னிடம் காங்கிரஸ் மேலிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற அதிருப்தி, கருணாநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


அவசர பயணம்:இந்நிலையில், நேற்று முன்தினம், பரதமர் இல்லத்தில் நடந்த வேட்பாளர் தேர்வு கூட்டத்தில், டி.ஆர்.பாலு பங்கேற்று, அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்தச் ‘ழ்நிலையில், நேற்று மதியம் 3.30 மணி அளவில், டில்லியிலிருந்து சென்னைக்கு, அவசரமாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார். விமான நிலையத்திலிருந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு ஓய்வு எதுவும் எடுக்காமல், தனது உடையை மாற்றி விட்டு, மீண்டும் ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.ஐ.டி., காலனி வீட்டிற்கு, சிதம்பரம் வந்தார்.

ஆலோசனை :கருணாநிதியுடன், சிதம்பரம் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, துணை ஜனாதிபதி அன்சாரி தேர்வுக்கு, தி.மு.க., ஆதரவு தெரிவித்ததற்காக, சிதம்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, இருவரும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணியின் வேட்பாளர்களின் வெற்றி குறித்தும், அரசியல் தொடர்பாக, சில முக்கிய பரச்னைகள் குறித்தும், ஆலோசனை நடத்தியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக