சனி, 14 ஜூலை, 2012

கேரள நடிகர்கள் ஷாக்! இனி பிரைவேட் விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது! -

Kerala Film Chamber Bans Actors Att
திருவனந்தபுரம்: கேரள படங்களின் தொடர் தோல்வி காரணமாக, இனி நடிகர், நடிகைகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய வருவாய் ஆதாரமாக இந்த தனியார் விழாக்கள் இருப்பதால், அடுத்து என்ன செய்வதென ஆலோசனையைத் தொடங்கியுள்ளனர் கேரள நடிகர் சங்கத்தினர்.
கேரளாவில் சமீப காலமாக திரையிடப்படும் சினிமாக்கள் குறிப்பிட்ட வசூலும் பெறாமல் தோல்வி அடைந்து வந்தன. முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் தோல்வியை தழுவின. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்குள்ளானார்கள்.
இந்நிலையில் கேரளா பிலிம் சேம்பர் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் மலையாள சினிமா நடிகர்கள் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதால் சினிமா வசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று புகார் எழுப்பப்பட்டது.
எனவே அரசு விருது விழாக்களை தவிர மற்ற தனியார் விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்த தடை அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை மலையாள நடிகர் சங்கத்துக்கு அனுப்பவும் தடையை மீறி யாராவது விழாக்களில் கலந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள பிலிம் சேம்பர் முடிவு செய்துள்ளது.
பிலிம் சேம்பரின் இந்த முடிவால் மலையாள நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓரளவு பிரபல நடிகைகளாக இருந்தால் கூட, ஒரு தனியார் விழாவில் பங்கேற்க ரூ 3 லட்சம் வரையிலும், மேடையில் ஆட, பாட வேண்டுமானாலும் ரூ 8 லட்சம் வரையிலும் தரப்படுகிறது. முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு இதைவிட மூன்று மடங்கு வரை தருகிறார்கள்.
விளம்பரப் படங்களில் நடிக்க இன்னும் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.
சினிமாவில் தருவதைவிட இது அதிகம் என்பதால், தனியார் விழாக்கள், விளம்பரங்களுக்கு முன்னுரிமை தருகின்றனர் நடிகர் நடிகைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக