திங்கள், 9 ஜூலை, 2012

முல்லைப் பெரியாறு... அடிதடி கலாட்டாவில் முடிந்த தமிழக, கேரள கலாச்சார கூட்டம்!

கோட்டயம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது தொடர்பான மாற்றுக் ஆலோசனைகளைத் தெரிவிக்க கோட்டயத்தில் கூட்டப்பட்ட தமிழக, கேரள கலை, எழுத்துலகினர் நடத்திய கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டு கூட்டம் பாதியிலேயே முடிந்து போனது.
உயிரு என்ற தமிழ்-மலையாள கலாச்சார அமைப்பு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சிவிக் சந்திரன், தேவிகா, சாரு நிவேதிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீர வேண்டும் என்ற முரட்டு மற்றும் வறட்டுப் பிடிவாதத்துடன் செயல்பட்டு வரும் முல்லைப் பெரியாறு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.டி.பலராமின் செய்தி அறிக்கை ஒன்றை வாசிக்க ஆரம்பித்தபோது கலாட்டா வெடித்தது. பலராம் தனது அறிக்கையில், புதிதாக அணை கட்டுவதற்குப் பதில் மாற்றுத் திட்டங்கள் குறித்து யோசிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கேட்டதும், முல்லைப் பெரியாறு நடவடிக்கைக் குழுவினர் பலத்த கோஷத்துடன் மேடையை நோக்கிப் பாய்ந்தனர்.
அணைக்கு எதிரான கோஷம் எழுப்பிய அவர்கள் மேடையில்இருந்தவர்களை அடிக்கப் பாய்ந்தனர், தள்ளி விட்டனர், கூட்டத்தை சீர்குலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை மோசமாக இருந்ததால் கூட்டம் கைவிடப்படுவதாக கூறி விட்டு அனைவரும் வெளியேறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக