வெள்ளி, 13 ஜூலை, 2012

சங்மா அணியினர் Black Mail? பிரணாப் வெற்றி பெற்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி :ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்றால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என பி.ஏ.சங்மா அணியினர் அறிவித்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தான் வகித்து வந்த நிதியமைச்சர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். இதில் ஒரு சில ஆதாயம் தரும் பதவிகளை அவர் ராஜினாமா செய்யவில்லை என பிரணாப்பை எதிர்த்து போட்டியிடும் பி.ஏ.சங்மா குற்றம் சாட்டியிருந்தார்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஐஎஸ்ஐ நிறுவனத்தின் கவுரவ தலைவர் பதவியை பிரணாப் ராஜினாமா செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. பிரணாப் தரப்பில் காண்பிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தில் இருப்பது அவரது கையெழுத்து இல்லை எனவும், அதற்கு சான்றாக கையெழுத்து நிபுணர் சான்றும் வாங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜனாதிபதி தேர்தல் அதிகாரியிடம் முதலில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் சங்மா அணி புகார் மனு கொடுத்தது. தலைமை தேர்தல் ஆணையமும் சங்மாவின் கோரிக்கையை நிராகரித்தது. தேர்தல் பிரச்னைகளை தேர்தல் வழக்காகத்தான் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சங்மா அணியைச் சேர்ந்த வக்கீல் ராம் ஜெத்மலானி, சுப்ரமணியசாமி மற்றும் பா.ஜ. சட்டப்பிரிவு தலைவர் சத்யபால் ஜெயின் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். பொதுவாக தேர்தல் வழக்குகளை தேர்தல் முடிந்த பின்னரே தொடர முடியும் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறும்பட்சத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடருவது எனவும் முடிவு செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக