செல்போனில் தூள்கிளப்பும் விவசாயிகள்
புதுடெல்லி: இந்தியா, சீனா, வங்கதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளில் உலக
வங்கி சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன்
நகரில் உள்ள சர்வதேச உணவு கொள்கை ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்தில் அதிகபட்சமாக 80%
விவசாயிகள் செல்போன் வைத்திருக்கின்றனர். விதை வகைகள், பயிர் பாதுகாப்பு,
மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பம், மார்க்கெட் நிலவரம் உள்ளிட்ட தகவல்களை
செல்போன் மூலமாகவே அறிந்துகொண்டு நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். 95 சதவீத
ஏரியாவில் ‘டவர்’ சூப்பராக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக