செவ்வாய், 24 ஜூலை, 2012

8 இடங்களில் மெட்ரோ மேம்பால ரெயில் நிலையங்கள்

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோயம்பேடு - பரங்கிமலை இடையே மேம்பால தூண்கள் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்து விட்டன. 
 கோயம்பேடு- அசோக்நகர் இடையே 1150 தூண்கள் அமைக்க வேண்டும். இதில் 1079 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. அசோக்நகர் முதல் பரங்கி மலை வரை 345 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 தூண்கள் கட்டினால் இந்த பகுதியின் கட்டுமான பணிகள் முடிவடையும்.

கோயம்பேடு - பரங்கிமலை வழித்தடத்தில் 8 இடங்களில் மேம்பாலத்தில் ரெயில் நிலையங்கள் அமைகிறது. கோயம்பேடு, கோயம்பேடு புறநகர், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்படுகிறது. ரெயில் நிலைய கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.


உயரமான மேம் பாலத்தின் மீது கட்டப்படும் இந்த ரெயில் நிலையங்கள் பிரமிக்க வைக்கிறது. கோயம்பேட்டில் 68 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பணிமனை கட்டப்படுகிறது. 7 மாடிகளுடன் இந்த பணிமனை அமைகிறது. இதில் நிர்வாக அலுவலகம், ஒட்டுமொத்த மெட்ரோ ரெயில்களையும் இயக்கக்கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு மையம், மெட்ரோ ரெயில்களை நிறுத்தி பராமரிப்பதற்கான இடம் அனைத்தும் அமைகிறது. இந்த பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான வழித்தடம் 15 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த வழித் தடத்தில் அடுத்த ஆண்டு (2013) டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளனர். இந்த 15 கிலோ மீட்டர் தூரமும் மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில் செல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக