வெள்ளி, 27 ஜூலை, 2012

ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?ஆனால் விஷயம் தெரியாமல் அமுக்கி

 2 More Students Died Zion School ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?

சென்னை: சர்ச்சையில் சிக்கியுள்ள சென்னை ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும், ஆனால் விஷயம் தெரியாமல் அமுக்கி விட்டதாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை, சேலையூர் ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி,தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பேருந்து சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் ஏற்கனவே இப்பள்ளிக்கூடத்தில் இரு குழந்தைகள் சர்ச்சைக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை செம்பாக்கத்தில், அப்பள்ளியின் கிளை ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் படித்து வந்த கேஜி மாணவி ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிடும்போது விக்கல் எடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவிக்கு ஆயா ஒருவர் சாப்பாடு ஊட்டியதாகவும், வேகம்வேகமாக சாப்பாட்டை ஊட்டியதால் விக்கல் ஏற்பட்டு அக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் வெளியே தெரியாமல் அமுக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
அதேபோல இன்னொரு மாணவன் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதையும் வெளியே தெரியாமல் அமுக்கி விட்டதாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக