மதுரை: பிடதியை விட்டு வெளியேற்றப்பட்டு மதுரை,
கொடைக்கானல், திருவண்ணாமலை என மாற்றி மாற்றி முகாமிட்டு வரும்
நித்தியானந்தாவும், அவரது 100 ஆதரவாளர்களும் இன்று திடீரென அழகர்கோவில்
பக்கம் விசிட் அடித்தனர்.
அங்கு ஆசிரமம் அமைக்க இடம் தேடி நோட்டம் பார்க்க
அவர்கள் போனார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.கொடைக்கானலுக்கு நித்தியானந்தா போனதே, அங்கு புதிய ஆசிரமம் அமைக்க இடம் தேடித்தான் என்று அந்தப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அங்கு ஒரு இடத்தை நித்தியானந்தா பார்த்து வைத்துள்ளதாகவும், அங்கு புதிய ஆசிரமத்தை அவர் நிர்மானிக்கப் போவதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
இந்தநிலையில் இன்று தனது ஆதரவாளர்கள் பரிவாரத்துடன் திடீரென மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதிப்பகுதியான அழகர்கோவிலுக்குப் போனார் நித்தியானந்தா. முற்பகல் 11.30 மணி அளவில் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆதரவாளர்கள் பட்டாளத்தில் லோக்கல், ஐஎஸ்டி என ஆதரவாளர்கள் நிரம்பியிருந்தனர். வெள்ளையும் சொள்ளையுமாக வந்த நித்தியானந்தா குரூப்பைப் பார்த்து சாமி கும்பிட வந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்தாம்ப்பா நித்தியானந்தா என்று பலர் எட்டி எட்டி வேடிக்கை பார்த்தனர்.
கோவிலுக்கு வந்த நித்தியானந்தா அன் கோவினர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோர் தரிசனம் செய்தார். பின்னர் அவர் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
ஒரு மணி நேரம் இவர்கள் கோவில் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்களது திடீர் வருகை குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன. அழகர்கோவில் பக்கமும் தனது ஆசிரமத்திற்கு இடம் தேடி, நோட்டம் பார்க்க இவர்கள் வந்திருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக