ஞாயிறு, 1 ஜூலை, 2012

திறந்தவெளி கழிவறை:10 ஆண்டுகளில் முடிவுக்கு வரும்

அகர்த‌லா:இந்தியாவில் திறந்தவெளி கழிவறை பயன்படுத்துவது 10 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.‌‌ அகர்தலாவில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்போது பேசிய ர‌மேஷ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது குறித்து கூறுகையில் திறந்தவெளி கழிவறையை பயன்படுத்துவது முதலாவதாக சிக்கிம் மாநிலத்தில் விரைவில் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருக்கும் என்றார்.பின்னர் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மனிப்பூர், மிஜோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும். தற்போது, இந்தியாவில் 60 சதவீதம் பேர் திறந்தவெளியை பயன்படுத்துவதாகவும் பெண்களில் 65 சதவீ‌தம் பேர் இந்நிலையையே பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். மொத்தம் உள்ள 2,40,000 கிராம பஞ்சாயத்துகளில் (நிர்மல் கிராம் பஞ்சாயத்துகள்) 10 சதவீதம் மட்டும் தான் தூய்மை கிராமம் அடைந்துள்ளது என்றும் கழிப்பறை வசதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக