பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, திருமணம் செய்ய மறுப்பு: பெண் புகாரில் பாதிரியார் கைது
பாலியல்
ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டு, திருமணம் செய்ய மறுப்பதாக ஆசிரியை
ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து சென்னை பரங்கிமலை பாதிரியார் கைது
செய்யப்பட்டார்.
சென்னை, பரங்கிமலையில்
உள்ள புனிதமேரி பள்ளியில் பணிபுரிந்து வருபவர் ரெஜினா. அவர் இன்று
பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்
பரங்கிமலை சர்ச் பாதிரியார் பிரேம் குமார் ஆசைவார்த்தை கூறி தன்னுடன் உறவு
கொண்டதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பாதிரியார்
பிரேம் குமாரை கைது செய்த பரங்கிமலை மகளிர் போலீசார், அவரை மருத்துவப்
பரிசோதனை செய்ய செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக