Viruvirup
நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை முடிக்கும் முயற்சியில் ‘சிலர்’
இறங்கியிருப்பதாக ரிலையபிள் சோர்ஸ் தகவல் ஒன்று உள்ளது. சுவாமிகளின்
பாஸ்போர்ட், அவரது அபிமானி ஒருவரின் கைகளில் தற்போது உள்ள. குறிப்பிட்ட
அபிமானி, சென்னையில் உள்ள மூன்று வெளிநாட்டு துணை தூதரகங்களுக்கு
சமீபத்தில் நித்தியின் பாஸ்போர்ட் சகிதம் விசிட் அடித்துள்ளார்.பாஸ்போர்ட் புகுந்து புறப்பட்ட தூதரகங்கள் எவை என்று பார்த்தால், சுவாமிகள் ஐரோப்பிய ட்ரிப் ஒன்றுக்கு ஆயத்தம் செய்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது. தற்போது அங்கே கோடை காலம்.
கர்நாடகாவில் ஏற்பட்ட இழுபறிகள் காரணமாக நித்தி, பதட்டம் குறையும்வரை பிடதி பக்கம் தலைவைத்து படுப்பதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார்கள். மதுரையில் பேசும்போது, “எனக்கு அங்கே எந்தப் பிரச்னையும் கிடையாது. விரைவில் அங்கே சென்று ஆன்மீகப் பணிகளை (!) ஆரம்பித்து விடுவேன் என சுவாமிகள் கூறினாலும், நிஜ நிலவரம், கலவரமாகவே உள்ளது.
அங்கிருந்து மதுரைக்கு ஓடோடிவந்த அவரை, ஏமாற்றி விட்டார்கள், மதுரைவாழ் மக்கள். வெளியே தலைகாட்ட முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்றால், அங்கேயும் விடாது துரத்துகிறார்கள்.
சாமியார் இப்போது தடியெடுத்து அடிக்க வராத இடத்தில் தங்கியிருக்கவே விரும்புகிறார்.
கர்நாடகா முதல்வரை சுவாமிகள் ஓரளவுக்கு ‘காம்’ பண்ணிவிட்டார் என்றே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. முதல்வருக்கு மிகவும் ‘வேண்டப்பட்ட’ மற்றொரு அமைப்பின் தலைவர், நம்ம சாமிக்கும் வேண்டப்பட்டவராக உள்ளார். இந்த அமைப்பின் தலைவர் பண வர்ணமாற்று (கறுப்பை வெள்ளையாக்குவது) காரியங்களுக்கு இளைய ஆதீனத்தையே நம்பியிருப்பவர்.
கர்நாடகாவில் இருந்து கறுப்பாக வெளியேறும் பணம், சாமியின் சில பிசினெஸ்கள் மூலம், இறக்குமதி வர்த்தகத்தில் திரும்பி வரும்போது, வெள்ளையாக வந்து மகிழ்வூட்டும் என்பதால், இருவருக்கும் நெருக்கம். அந்த நெருக்கத்தின் மூலம், கர்நாடக முதல்வரை சுவாமி அமைதியாக்கி விட்டார் என்கிறார்கள்.
மாநில அரசு அமைதியாகி விட்டாலும், இந்து அமைப்புகள் பல சாமிக்கு எதிராக அங்கே கொடி பிடிக்கின்றன. பிடதியில் கால் வைத்தால், பிடரியில் கால் பட ஓடிவர வேண்டிய நிலை ஏற்படும் என, நிலவரம், கலவரமாக உள்ளது அங்கே.
வேறு எங்கே போவது? காசி, வரணாசி என்று காவி கட்டிச் செல்லும் வயதா அவருக்கு? எனவே வெளிநாட்டு ரூரில் கவனம் போயிருக்கிறது.
மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு பெயர்போன நாடு ஒன்றுக்கும் (Spain), baguette-க்கு (ஒருவகை பிரெட்) பெயர்போன நாடு ஒன்றுக்கும்(France), போவதுதான் ஆரம்பத் திட்டம் என தெரிய வருகிறது. ஆனால், baguette நாட்டுக்காரர்கள் விசா கொடுப்பதில் தாமதம் காட்டி இழுத்தடிக்கவே, (12 மாத மல்டிபிள் என்ரி விசாவுக்கு அப்ளை பண்ணியதால் ஏற்பட்ட வினை) திட்டம் லேசாக மாறியிருக்கிறது.
ட்யூலிப் மலரை அதிகாரபூர்வமற்ற தேசிய பூவாக வைத்துள்ள நாட்டுக்கு விசா எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ‘ஆத்திப் பூ’ வைத்து பூசை செய்த நம்ம சுவாமிகள், ட்யூலிப் பூவை வைத்து என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறாரோ!
‘ஆத்தி பூ’, தெரியாதா? அந்தப் பூ ‘மையல் கொண்ட மகளிருக்கு’ என்ன செய்யும் என்பதை, தண்டியலங்காரத்தில், “மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கும் ஆரப் பனித்தொடையல் பார்த்திபர்கோன்..” என்ற மேற்கோளில் காணவும்.
அடி ஆத்தீ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக