maria alphonse - chennai
புதுடில்லி:பிரணாப் முகர்ஜியை எதிர்க்க சரியான வேட்பாளர் யார் என்பதை,
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை.
பிரணாபிற்கு சரியான போட்டி தரும் வகையில் வேட்பாளரை தேர்வு செய்ய
திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது. நேற்று நடந்த தே.ஜ., கூட்டணி தலைவர்கள்
கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், மத்திய நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், பா.ஜ.,
தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.
இது பற்றி ஆலோசிப்பதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், சரத் யாதவ், சிவானந்த் திவாரி ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்து வேறுபாடு :கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரதிநிதி, "பிரணாப் சிறப்பு வாய்ந்த ஒரு நபர். அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது சரியாக இருக்காது' என, தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பா.ஜ., தலைவர்களான அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர், "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இதனால், தே.ஜ., கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.< ஒருமித்த கருத்தில்லை: அதே நேரத்தில், பிரணாபிற்கு போட்டியாக களம் இறங்கப் போவதாக அறிவித்துள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவு பெற்ற, லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதா அல்லது திரிணமுல் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள அப்துல் கலாமை ஆதரிப்பதா என்பது தொடர்பாகவும், ஒருமித்த கருத்து உருவாகவில்லை. சங்மாவை ஆதரித்தால், அ.தி.மு.க., மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆதரவை தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்காலத்தில் பெற முடியும். அடுத்த லோக்சபா தேர்தலுக்கும் அது உதவியாக இருக்கும் என, பா.ஜ., தலைவர்கள் நம்பினாலும், இது தொடர்பாக முடிவு எடுக்கும் முன், அந்த இரு கட்சிகளின் தலைவர்களுடனும் தீவிரமாக ஆலோசிக்க வேண்டியது அவசியம் என, கூறியுள்ளனர். மேலும், கலாம் பெயரை முன்மொழிந்துள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, அதை கைவிட்டு, சங்மாவை ஆதரிக்க முன்வருவாரா என்பதும் தெரியவில்லை. எனவே, அது பற்றியும் மம்தாவுடன் ஆலோசிக்க தீர்மானித்துள்ளனர். இதுவரை அப்துல் கலாமும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆலோசனை : இதனால், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் எந்த
முடிவும் எடுக்கப்படவில்லை.
அத்வானியின் வீட்டில் நடந்த கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய, தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளர் சரத் யாதவ், ""ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில், ஒரு சரியான முடிவுக்கு வர மேலும் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடனும், மற்றவர்களுடனும் அத்வானி ஆலோசனை நடத்துவார். அதனால், தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டம் மீண்டும் நடைபெறும்; அப்போது முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
பலன் இல்லை :ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மற்றொரு தலைவரும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவருமான சிவானந்த் திவாரி, பிரணாபிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பிரணாபிற்கு எதிராக போட்டி எதற்கு என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். அதே சமயம் பிரணாபை வேட்பாளராக அறிவிக்கும் முன், எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெறாததால், பொது வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெறவில்லை பிரணாப் என்பது பா.ஜ.,வின் கருத்தாக உள்ளது. பொது வேட்பாளராக பிரணாப் கருதப்படும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வியும் எழும். ஆகவே, இத்தேர்தலில் போட்டியிட, பல்வேறு அம்சங்களிலும் சிறந்த தலைவரை தேர்வு செய்யும் கருத்தும் உள்ளது. ஆகவே, அடுத்த கட்ட ஆலோசனை தேவை என்ற கருத்தை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மம்தாவுடன் சங்மா பேச்சு : ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்
போவதாக அறிவித்துள்ள பி.ஏ.சங்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி எச்சரித்திருந்தாலும், ""நான் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் உள்ளேன். என்னை ஆதரிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசினேன். எனக்கு ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை,'' என, சங்மா கூறியுள்ளார்.
லோக்சபா முன்னாள் சபாநாயகரான சங்மா நேற்று கூறுகையில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எனக்கு ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, கலாம் விரும்பவில்லை. எனவே, எனக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன். அதற்கு பதிலளித்த மம்தா, "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கலாம் சம்மதித்தால், நீங்கள் ஆதரவு தர வேண்டும்' என, என்னை கேட்டுக் கொண்டார்' என்று தெரிவித்தார்.
பலமான
வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லாத?? கட்சி பிஜேபி.... அத்வானி.. யஸ்வந்த்
சின்ஹா...சோ...என வால் போல நீண்டுகொண்டே போகும்... ஆனால் கூட்டணிக்கட்சிகளை
( ஜனதா தள், சிவசேன ) சரி கட்ட வேண்டும்.... சரி கட்டினாலும் வெற்றி
பெறுவது என்பது கடினமே.... மம்தாவை சேர்த்தாலும் தேறுவது கடினம்...(மம்தாவை
சேர்ப்பது இன்னொரு ஜெயாவை சேர்ப்பதற்கு சமம்..)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக