வெள்ளி, 15 ஜூன், 2012

Sonia: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவி வேட்பாளர் சோனியா அறிவிப்பு!

 Upa Announce Pranab Mukherjee As President
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று மாலை கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தி்ல அவர் பிரணாபின் பெயரை முன்மொழிந்தார். இதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஜூன் 24ம் தேதி நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து விட்டன. மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வரும் முலாயம் சிங்யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் கடைசி நேரத்தில் முலாயம் சிங் யாதவை தங்கள் பக்கம் காங்கிரஸ் கட்சி திருப்பி விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்தது காங்கிரஸ்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவித்தார். இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அதை கைதட்டி வரவேற்றனர்.
24ம் தேதி பதவி விலகுவார் பிரணாப்
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். வருகிற 24ம் தேதி அவர் தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் வழங்குவார் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக