பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குப் போகிறார் - சாமுவேல் ஜாக்சனை வைத்து படம் இயக்குகிறார்!
கமல்ஹாசனைத் தொடர்ந்து பாரதிராஜாவும்
ஹாலிவுட்டுக்குக் கிளம்புகிறார். தமிழில் ஹிட்டடித்த பொம்மலாட்டம் படத்தை
அவர் ஆங்கில வடிவத்திற்குக் கொண்டு செல்கிறார்.
நீண்ட காலமாக
இயக்கத்தில் இருந்து பின்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம்
பொம்மலாட்டம். நானா படேகரின் நடிப்பும், அர்ஜூனின் பாத்திரமும் அனைவராலும்
வரவேற்கப்பட்டு பேசப்பட்டது. ஒரு திரைப்பட இயக்குநரைப் பின்னணியாகக் கொண்ட
படம் பொம்மலாட்டம்.இந்தப் படத்தைத்தான் தற்போது ஹாலிவுட்டுக்குக் கொண்டு செல்கிறார் பாரதிராஜா. இப்படத்தில் நானா படேகர் பாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சனை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அர்ஜூன் பாத்திரத்தில் பாரதிராஜாவின் நண்பர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவரே படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
பொம்மலாட்டமும், தானும் ஹாலிவுட்டுக்குப் போவதை உறுதி செய்துள்ளார் பாரதிராஜா. ஆமாம், ஹாலிவுட்டில் எனது பொம்மலாட்டத்தை ரீமேக் செய்யப் போவது உண்மைதான். அமெரிக்காவைச் சேர்ந்த எனது நான்கு நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கப் போகிறார்கள் என்றார்.
தற்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாரதிராஜா அதை முடித்து விட்டு ஹாலிவுட் பறக்கிறார். ஆங்கில ரசிகர்களுக்காக பொம்மலாட்டம் படத்தின் திரைக்கதையில் மாற்றமும் செய்கிறாராம் பாரதிராஜா.
சமீபத்தில்தான் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்குப் போகும் செய்தி வெளியானது. அந்தப் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளார். திரைக்கதையும் அவரே. இந்த நிலையில், பாரதிராஜாவும் ஹாலிவுட் போவது தமிழ் திரையுலக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமலும், பாரதிராஜாவும் இணைந்து 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என தமிழில் மாயாஜாலம் புரிந்தவர்கள். இப்போது இருவரும் தனித் தனியாக ஹாலிவுட்டுக்குள் புகுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக