கடந்த ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 42,125 சிறிய கார்களை (ஆல்ட்டோ, மாருதி 800, ஏ-ஸ்டார் மற்றும் வேகன்-ஆர்) அந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 29,895 சிறிய கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்திருக்கிறது.
சிறிய கார்களின் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டிருப்பது மாருதியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. மேற்கண்ட கார்கள் அனைத்திலும் பெட்ரோல் மாடல்கள் மட்டுமே இருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும், கடந்த இரு மாதங்களாகவே சிறிய கார்கள் சோபிக்காததால் மாருதிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வந்த குட்டி டிசையர், ஏப்ரலில் வந்த எர்டிகா ஆகியவை மாருதிக்கு பெரும் நம்பிக்கை தந்துள்ளன. இதனால், விற்பனையில் பெரிய வீழ்ச்சி ஏற்படாமல் மாருதி ஓரளவுக்கு தப்பித்தது.
கடந்த மாதம் 7,734 எர்டிகா கார்களையும், 17,707 குட்டி டிசையர் கார்களையும் மாருதி விற்பனை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக