வெள்ளி, 22 ஜூன், 2012

DMK மிகப் பெரிய போராட்டத்தில் குதிக்க முடிவு?

 Dmk Executive Meet Discuss Repressive Jayalalitha அதிமுகவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தில் குதிக்க முடிவு?

 பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என வளைத்து வளைத்துக் கைது செய்து வரும் அராஜகப் போக்கைக் கண்டித்து மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி கூட்டத்துக்கு வரவில்லை. மதுரை அருகே தனது பண்ணை வீட்டில் அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அடுத்தடுத்து திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக பிரமுகர்கள் மீது சரமாரியாக நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்தவண்ணம் உள்ளன. கைதாவதும், ஜாமீனில் வெளியே வருவதும், பிறகு மீண்டும் கைதாவதுமாக உள்ளனர் திமுகவினர்.
இதில் மதுரை மாநகர திமுக செயலாளர் தளபதியை அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர் போலீஸார்ர். மூத்த தலைவரான வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வழக்குகள் பாய்ந்து வருவதால் திமுகவினர் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர். நமது எதிர்ப்பை அதிமுக அரசுக்கு காட்டியாக வேண்டும் என்ற முனைப்புடன் அவர் உள்ளனர்.
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பொறுமைக்கு எல்லை உண்டு என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தும் முடிவை திமுக எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பெரும் திரளாக கூடியுள்ளனர்.
வழக்கம் போல அழகிரி வரவில்லை
இன்றைய கூட்டத்தில் மு.க.அழகிரி வழக்கம் போல கலந்து கொள்ளவில்லை. சமீப காலமாக முக்கிய கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் கட்சியின் முக்கியப் பதவியை எதிர்நோக்கி போராடி வரும் மு.க.அழகிரி. இதனால் திமுகவின் முன்னணித் தலைவர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். ஆனால் கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த முடியாத நிலையில் திமுகவினர் உள்ளனர்.
இன்றைய கூட்டத்து்கும் அழகிரி வரவில்லை. மாறாக, மதுரை அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக